Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeஉள்ளூர் செய்திகள்கோவைகோவை நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை மற்றொருவர் படுகாயம் ..

கோவை நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை மற்றொருவர் படுகாயம் ..

கோயம்புத்தூர் நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவத்தில் ஈடுபட்ட நால்வரை போலீசார் தேடி வருகின்றனர்

கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் கோகுல். சிவானாந்தா காலனியை சேர்ந்தவர் மனோஜ். இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இவர்கள் 2 பேரும் வழக்கு ஒன்றில் ஆஜராகி கையெழுத்து போடுவதற்காக இன்று காலை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் வந்தனர். பின்னர் கோகுலும், மனோஜூம் நீதிமன்றம் பின்புறம் உள்ள பகுதிக்கு டீ குடிக்க சென்றனர். அப்போது அவர்களுக்கு பின்னால் 4 பேர் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

ஆனால் இவர்கள் 2 பேரும், அவர்கள் கோர்ட்டிற்கு வந்தவர்களாக இருப்பார்கள் என நினைத்து கடைக்கு நடந்து சென்றனர். கடையின் அருகே சென்று, பேசி கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த 4 பேரும் கோகுலின் அருகே வந்தனர்.

வந்த வேகத்தில் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து கோகுலை சரமாரியாக வெட்டினர். இதில் கோகுலின் கழுத்தில் கத்தி வெட்டு விழுந்தது. கத்தி அப்படியே கழுத்தில் மாட்டி கொண்டது. இதை பார்த்து அதிர்ச்சியான மனோஜ், அவர்களிடம் இருந்து கோகுலை காப்பாற்ற முயன்றார். ஆனாலும் அந்த கும்பல், அவரையும் வெட்டினர். இதனால் பலத்த காயம் அடைந்த 2 பேரும் அலறி சத்தம் போட்டனர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியாகினர். வாலிபர்களை வெட்டிய கும்பலை அவர்கள் பிடிக்க முயன்றனர்.

ஆனால் அதற்குள்ளாகவே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதுகுறித்து ரேஸ் கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக வடக்கு துணை கமிஷனர் சந்தீஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு உயிருக்கு போராடியவர்களை மீட்டனர். அப்போது இதில் கோகுல் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய மனோஜை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்