- Advertisements -
Home உள்ளூர் செய்திகள் கோவை ஈரோடு வாக்கு எண்ணிக்கை- காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை..

ஈரோடு வாக்கு எண்ணிக்கை- காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை..

- Advertisements -

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி: மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவை விட 12,726-வாக்குகள் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. முதல் சுற்றில் இருந்தே தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலை பெற்று வருவதால் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாட தொடங்கியுள்ளனர்.

ஈரோடு இடைத்தேர்தலுக்கான 2-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று முடிந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 6 ஆயிரம் வாக்குகளில் முன்னிலையில் இருந்தார்.தற்போதைய நிலவரப்படி ஈவிகேஎஸ் இளங்கோவன் 9,124 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 2,868 வாக்குகள் பெற்றுள்ளார்.

- Advertisements -

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

238 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. அதன் பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தற்போது நடைபெறுகிறது. மொத்தம் 15 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

ஈரோடு கிழக்கில் நாங்கள் மகத்தான வெற்றி பெறுவோம்- என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார்.ஈரோடு கிழக்கில் நாங்கள் மகத்தான வெற்றி பெறுவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்தார். அதிமுக சஞ்சலத்தில் உள்ளது. தன்னம்பிக்கை இல்லாத ஒரு கட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள் எனவே எங்கள் கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும் என்று கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.

ஈரோடு இடைத்தேர்தலுக்கான 2-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 6 ஆயிரம் வாக்குகளில் முன்னிலையில் உள்ளார். தற்போதைய நிலவரப்படி ஈவிகேஎஸ் இளங்கோவன் 9,124 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 2,868 வாக்குகள் பெற்றுள்ளார்.

முன்னதாக 9மணி நிலவரப்படி நிலவரப்படி 5,212 வாக்குகள் பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உஇருந்தார்.இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் 2,932 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்

ஈரோடு கிழக்கு தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளதையடுத்து காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடத்தொடங்கியுள்ளனர்.

ஈரோடு இடைத்தேர்தலுக்கான 2-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 6 ஆயிரம் வாக்குகளில் முன்னிலையில் உள்ளார். தற்போதைய நிலவரப்படி ஈவிகேஎஸ் இளங்கோவன் 9,124 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 2,868 வாக்குகள் பெற்றுள்ளார்.

- Advertisements -

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − four =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.