
கோவையில் விசாரணையின்போது துப்பாக்கிச்சூடு நடத்தி தப்ப முயன்ற ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர் போலீஸ் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த கோவை துணை கமிஷனர் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்த பின் தற்பாதுகாப்புக்காக சப்-இன்ஸ்பெக்டர் சுட்டதில் சஞ்சய் ராஜா காலில் குண்டு பாய்ந்தது. அவர் 10 நிமிடத்தில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டதாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியா பாண்டி. ரவுடியான இவரை கடந்த மாதம் 12-ந்தேதி இரவு கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல், அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தது. இந்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே 4 பேரை கைது செய்து இரு