அப்பா தயவில் வரல… உழைத்து வந்த எனக்கு எவ்ளோ கெத்து இருக்கும்?! ஸ்டாலினுக்கு எடப்பாடி பதில்!

கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமியை ஆதரித்து முதல்வர் பழனிச்சாமி ராயகோட்டை பேருந்து நிலையத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர், கே.பி.முனுசாமி இந்த மண்ணின் மைந்தர் என்றும், எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் இந்த பகுதியை சேர்ந்தவர் இல்லை என்றும் கூறினார்.

பின்னர் தொடர்ந்து அவர் பேசியவற்றில் இருந்து…

இந்திய நாட்டிற்கான தேர்தல்!  நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும்!  திட்டங்கள் மக்களுக்கு சேர வலிமையான திறமையானவரை பிரதமராக தேர்வு செய்ய வேண்டும்

திமுக ஆதரிக்கும் கட்சி ஆட்சிக்கு வராது! எதிர் அணியில் ஸ்டாலின் மட்டும் தான் ராகுல் பெயரை கூறுகிறார்!  கூட்டணியில் சிதம்பரம் தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யப்படும் என கூறுகிறார்… எதிர் அணியினர் குழப்பத்தில் உள்ளனர்!

130 கோடி மக்கள் வாழும் நாட்டில் திறனையான பிரதமர் வேண்டும்! அதனால் தான் நாம் மோடியை ஆதரிக்கிறோம்!

ஸ்டாலின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவா, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவா!? ஸ்டாலின் தவிர வேறு யாரும் ராகுல் பிரதமராக ஆதரவு தரவில்லை. இந்த நிலையில் எவ்வாறு ராகுல் பிரதமர் ஆக முடியும்!

இந்த தேர்தல் மூலம் எதிர் அணிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்!
ராகுல் பிரதமர் ஆனால் காவிரி குருக்கே அனை கட்டப்படும் என கூறுகிறார்.  காவிரி ஜீவ நதியை கொண்டு 20 மாவட்டம் உள்ளது!

ஸ்டாலின் அறிவித்த பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி காவிரி குறுக்கே அனை கட்டுவேன் கூறுவதால் தமிழகம் பாதிக்கப்படும்! வறண்ட பூமியான இந்த பகுதி செழிப்படைய வேண்டும்!

ஒகேனக்கல் கூட்டு குடு நீர் திட்டம் 2000 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது! 50 ஆண்டுகள் போராடி காவிரி நீரைப் பெற்றால் ராகுல் காந்தி பிரதமர் ஆனால் இந்த ஆணையத்தை கலைப்பேன் என சொல்கிறார்! இப்படிபட்ட செயல் தமிழக மக்களுக்கான அநீதி!

3000 ஏரிகள் தூர் வாரப்பட்டு உள்ளது. எங்கெல்லாம் ஓடை உள்ளதோ அங்கெல்லாம் தடுப்பனை கட்டப்படும்! நானும், உங்கள் வேட்பாளரும் ஒரு விவசாயி!

விவசாயிகள் பற்றி தெரிந்த எங்களுக்கு விவசாயத்திற்கு நீர் கொடுப்பது எங்கள் கடமை! இந்த தேர்தலுடன் திமுக சகாப்தம் முடிந்து விடும்! திமுக சந்தர்ப்பவாத கூட்டணி மதிமுகவிற்கு சின்னம் இருந்தும் திமுக சின்னத்தில் அதன் வேட்பாளர் போட்டியிடுகிறார் திமுகவில் உறுப்பினர் ஆனால் தான் அந்த சின்னத்தில் போட்டியிடும்!

திமுக தமிழகத்திற்கு ஒரு துரும்மை கூட கிள்ளி போட வில்லை! தேர்தல் முடிந்த உடன் திமுக தடை வாங்கிய ஏழை குடும்பங்களுக்கு 2000 வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்!

தேர்தல் மூலம் சந்தர்ப்பவாத கூட்டணிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்! திமுக தேர்தல் அறிக்கையில் மாநில திட்டங்களை அறிவித்து உள்ளனர்! நான் முதல்வராக இருக்கும் போது அவர்கள் எப்படி திட்டம் செயல்படுத்த முடியும்!

2021ல் தான் தேர்தல் அவர்கள் திட்டம் எவ்வாறு செயல்படுத்துவார்கள். இது ஒரு ஏமாற்று வேலை!  ஆட்சி, அதிகாரம் இல்லாமலயே அராஜகத்தில் திமுக ஈடுபடுகிறது! ஆட்சிக்கு வந்தால் என்ன நிலமை என யோசித்து பாருங்கள்!

இந்த நாடாளுமன்ற பிரச்சினைகள் குறித்து கே.பி.முனுசாமி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார்! காங்கிரஸ் கட்சி சார்பில் நிற்கும் வேட்பாளர் இறக்குமதி செய்யப்பட்டவர்.!

இந்த முறை இங்கு அடுத்த முறை எங்கு என தெரியாது! எம்.ஜி.ஆர் காலம் முதல் மக்களுக்காக உழைத்தவர் கே.பி.முனுசாமி என முதல்வர் பழனிச்சாமி புகழாரம்
எதிர் அணியில் உள்ள வேட்பாளர் மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர்!

நம் மண்ணின் மைந்தர் மக்கள் குறித்து அறிந்த கே.பி.முனுசாமிக்கு ஆதரவு தாருங்கள்! தமிழ் புத்தாண்டு துவக்கத்தில் அவருக்கு வெற்றி பரிசை அளிக்க வேண்டும்! 100க்கு 26 பேர் கல்வி பயின்ற நிலையில் தற்போது 46 பேர் படித்து வருகின்றனர்! கல்வியில் புரட்சியும், மறுமலர்ச்சியும் ஜெயலலிதா ஏற்படுத்தி உள்ளார்!

சென்னையில் 2000கோடியில் தனியார் உணவு பூங்கா துவங்க அரசு துணையாக உள்ளது! 100க்கு 65% பேர் வேளான் பணியில் ஈடுபட்டு உள்ளனர்! அதற்காக பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது! குடி மராமத்து பணி மூலம் ஏரிகள் தூர் வாரப்பட்டு வண்டல் மண் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது

ஓடை குருக்கே தடுப்பனை அமைக்க 1000கோடி நிதி ஒதுக்கிய அரசு எங்கள் அரசு!  76 கலை அறிவியல் கல்லூரி கொடுத்த அரசு ஜெயலலிதா அரசு! இந்திய மருத்துவ துறையில் ஒரு மைல் கல் தமிழக மருத்துவ துறை! உதாரணம் இரண்டு கைகளும் இல்லாத ஒருவருக்கு தமிழகத்தில் இறந்த உடலில் இருந்து இரண்டு கைகள் வெட்டி எடுக்கப்பட்டு பொருத்தப்பட்டு உள்ளது!

ஜெயலலிதா வெற்றி பெற்றதும் தடையில்லா மின்சாரம் மூன்று ஆண்டுகளில் கொண்டு வரப்படும் என கூறி சாதித்து காட்டியவர்! தமிழகத்திற்கு 304 தொழிற்சாலை கொண்டு வர புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது!

தொழில் துவங்க உகந்த மாநிலம் என தொழில் துறையினர் தெரிவித்து உள்ளனர். திமுக ஆட்சி காலத்தில் மின் தேவை 9000 மெகா வாட் ஆனால் அப்பொழுது அவர்களால் கொடுக்க முடியாமல் மின் வெட்டு இருந்தது. ஆனால் தற்போது 15,000 மெகாவாட் தேவை நாங்கள் சிறப்பாக மின் உற்பத்தி செய்து மின் வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகத்தை கொண்டு வந்து உள்ளோம்!

குடி நீர் பிரச்சினை தீர்க்க முழு நடவடிக்கை. ஒரு சில இடங்களில் உள்ள குடி நீர் பிரச்சினை தீர்க்க ஆய்வு நடைபெற்று வருகிறது! சட்டம் ஒழுங்கு கெட்டு போனதாக ஸ்டாலின் கூறுகிறார்!

ஆங்கில பத்திரிக்கை ஆய்வில் இந்தியாவில் சட்டம் ஒழுங்கை பேணி காக்கும் முதல் மாநிலம் தமிழகம் என தெளிவு படுத்தி உள்ளது!

சட்டம் ஒழுங்கில் சிறந்த மாநிலத்திற்கு மத்திய அரசிடம் பரிசு வாங்கி உள்ளோம்! நிர்வாக திறன் உள்ள அரசு என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு! இந்தியா முழுதும் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் அனைவரும் மோடிதான் பிரதமர் வேட்பாளர் என கூறுகின்றனர்!

ஆனால் எதிர் அணியில் யாரும் தெளிவாக பிரதமர் வேட்பாளர் பெயரை கூறுவது இல்லை, ஸ்டாலின் மட்டும் தான் ராகுல் பெயரை கூறுகிறார்

திமுக 5 ஆண்டுகாள ஆட்சியில் ஒரு முறை கூட மதுரைக்கு செல்லாதவர் ஸ்டாலின்

தற்போது சட்டம் ஒழுங்கு சரியாக உள்ள காரணத்தால் ஸ்டாலின் அங்கு செல்கிறார்!

திமுக ஆட்சியில் செல்ல முடிந்ததா? கிருஷ்ணகிரியில் வீடு இல்லாத ஏழைகளுக்கு மத்திய அரசுடன் இணைந்து அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி தரப்படும்!

ஸ்டாலின் எங்கு சென்றாலும் என்னை விமர்சிக்கிறார்! ஒரு முதல்வரை மண் புழு என்கிறார்!  மண் புழு விவசாயிகளின் நண்பன்! நான் விவசாய கிராமத்து வழியில் நான் பேசினால் உங்களால் பதில் பேச முடியாது! நல்ல எண்ணம் இருந்தால் பதவி வரும்~ நல்ல எண்ணம் இல்லாததால் ஸ்டாலினை தேடி பதவி வர மறுக்கிறது~ எம்.ஜி.ஆர் காலம் முதல் படிப்படியாக உயர்ந்து இன்று முதல்வராகி உள்ளேன்

ஸ்டாலின் அவரது தந்தை செல்வாக்கில் இந்த நிலையில் உள்ளார்! உழைக்காமல் வளர்ந்த உங்களுக்கு இவ்வளவு கெத்து என்றால் உழைத்து வந்த எங்களுக்கு எவ்வளவு கெத்து இருக்கும் என முதல்வர் பழனிச்சாமி பேச்சு. எம்.ஜி.ஆர் காலம் முதல் படிப்படியாக உயர்ந்து இன்று முதல்வராகி உள்ளேன்

~ ஸ்டாலின் அவரது தந்தை செல்வாக்கில் இந்த நிலையில் உள்ளார்

உழைக்காமல் வளர்ந்த உங்களுக்கு இவ்வளவு கெத்து என்றால் உழைத்து வந்த எங்களுக்கு எவ்வளவு கெத்து இருக்கும்

நல்ல எண்ணம் இருந்தால் பதவி வரும். நல்ல எண்ணம் இல்லாததால் ஸ்டாலினை தேடி பதவி வர மறுக்கிறது.   15 ஆண்டு மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக எதுவும் செய்யவில்லைஃ தமிழக பிரச்சினைக்காக 23 நாட்கள் நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்க செய்த கட்சி எங்கள் கட்சி!

ராகுல் பிரதமரானால் காவிரி குருக்கே மேகதாது அனை கட்டப்படும் என்கிறார் காவிரி ஆனையம் கலைக்கப்படும் என்கிறார் காவிரி குறுக்கே அனை கட்டினால் தமிழகம் பாலைவனமாக வரண்ட பூமியாக மாறிவிடும் ! ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக அறிவித்த ராகுல் அனை கட்ட அனுமதி என கூறியதற்கு ஸ்டாலின் என்ன பதில் கூறுவார்- என்று கேள்வி எழுப்பினார் எடப்பாடி பழனிசாமி.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...