ஏப்ரல் 23, 2021, 7:03 காலை வெள்ளிக்கிழமை
More

  சிவகாசி கவிதா நகரில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் வாறுகால்: அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி நேரில் ஆய்வு!

  வாறுகால் கட்ட உரிய அனுமதி வாங்கியவுடன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

  kt-rajendrabalaji-inspection-in-sivakasi
  kt-rajendrabalaji-inspection-in-sivakasi

  சிவகாசி அருகே கவிதா நகரில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள வாறுகால் பகுதியை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேரில் ஆய்வு செய்தார்.

  சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சி-சித்துராஜபுரம் ஊராட்சியுடன் இணைக்கும் கவிதாநகர் உள்ளது. இந்த கவிதா நகரில் சுமார் 700 மீட்டர் தூரம் வாறுகால் செல்கின்றது. இந்த வாறுகால் முறையாக பராமரிப்பு இல்லாததாலும் வாறுகால் கட்டப்படாததாலும் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

  இது குறித்து அப்பகுதி மக்கள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதனை தொடர்ந்து கவிதா நகர் ஓடையில் அதிகாரிகளுடன் அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.

  700 மீட்டர் தூரம் உள்ள இந்த கழுவுநீர் செல்லும் பாதையில் வாறுகால் அமைக்க சுமார் ஒன்றறை கோடி செலவாகும் என்று திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. வாறுகால் கட்ட உரிய அனுமதி வாங்கியவுடன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

  ஆய்வின் போது சிவகாசி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராமமூர்த்தி, நவாஸ். தொழில் அதிபர் காளீஸ்வரி குரூப் செல்வராஜன், விஸ்வநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், ஏ.ஆர்.டி குரூப் ஜெயராஜ், சிவகாசி ஒன்றிய கழக செயலாளர்கள் பலராம், புதுப்பட்டி கருப்பசாமி, வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், திருத்தங்கல் நகரக் கழகச் செயலாளர் பொன்சக்திவேல், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய செயலாளர் முத்தையா, மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் நல்லதம்பி, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் விஜய்ஆனந்த், மாவட்ட சிறுபான்மையினர் அணி செயலாளர் சையதுசுல்தான் இப்ராஹீம், சிவகாசி இளைஞரணி ஒன்றிய செயலாளர் சங்கர், ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிநாராயணன், வெம்பக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் அடைக்கலம், பொதுக்குழு உறுப்பினர்கள் பாபுராஜ், பாலாஜி , நகர அம்மா பேரவை செயலாளர் கருப்பசாமிபாணடியன், நகர இளைஞரணி செயலாளர் கே.டி.ஆர்.கார்த்திக் மற்றும் அரசு அதிகாரிகள் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,233FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »