25/09/2020 6:20 AM

தென் தமிழகத்தில் தொழில் தொடங்க சலுகை; இபாஸ் எளிதில் கிடைக்க நடவடிக்கை: முதல்வர்!

தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் கொரோனா காலத்தில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

சற்றுமுன்...

செப்.24: தமிழகத்தில் இன்று… 5692 பேருக்கு கொரோனா; 66 பேர் உயிரிழப்பு!

இதை அடுத்து தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 5,08,210 ஆக உயர்ந்துள்ளது.

எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை… மீண்டும் சீரியஸ்!

. பிரபல பிண்ணனிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் ஆரோக்கிய நிலை அபாயகரமாக உள்ளதாக தெரிகிறது.

ஓடிய பைக்கில் இருந்து ஒரே ஜம்ப்; குழந்தையை காப்பாற்ற இளைஞர் செய்த சாகசம்!

"அந்த கணத்தில் குழந்தையைக் காப்பாற்றுவது மட்டுமே அவர் தன் முழுமுதற் கடமை என்று நினைத்தார்"

மாஸ்க் இல்லாமல் ஜெகன் திருமலைக்கு பயணம்: விமர்சிக்கும் பொதுமக்கள்!

அந்த சந்திப்பிலும் அமித் ஷா, ஜகன் இருவருமே மாஸ்க் கட்டியிருக்கவில்லை. மேலும் இருவரும் கைகுலுக்கிக் கொண்டார்கள்

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் காலமானார்!

இல்லை, டீனோ. இல்லை. நான் வாயடைத்துப் போய் இருக்கிறேன், அதிர்ச்சியில் இருக்கிறேன், இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்
edappadi pazhanisami in madurai speech

மதுரை : தென்தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க முன்வருவோருக்கு புதிய சலுகைகளை அரசு வழங்கும்; இனி தமிழகத்தில் இபாஸ் எளிதில் கிடைக்கும் என, தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தெரிவித்தார்.

மதுரையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், ஆய்வுக் கூட்டத்தை நடத்திய பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது….

மதுரை மாவட்டத்தில் அதிகம் பரிசோதனை காரணமாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்தியாவில் தமிழகத்தில் தான் பரிசோதனை அதிகம் என்றும், அதனாலேயே நோய் தொற்றும் குறையத் தொடங்கியுள்ளது.
மதுரை மாவட்டத்தில், நகரில் அதிகபட்சமாக 4 ஆயிரம் பரிசோதனைகளும், புறநகர் பகுதிகளில் எட்டாயிரம் பரிசோதனை முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன.

மதுரையில், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவான எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. அதற்காக ஜப்பான் நிதி கோரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இ.பாஸ் முறையை மிக எளிமையாக்க கூடுதலாக மேலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதால், இ.பாஸ் எளிதாக கிடைக்கும்.

மதுரை அரசு மருத்துவமனையில் நான்கு மாடி கட்டிடமும், அதிநவீன கருவிகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட்டை 157..லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 25 கோடி மதிப்பீட்டில் புற்று நோய் அதிநவீன கருவியும், மதுரையில் 7 பேர் பிளாஸ்மா தானம் செய்துள்ளோர் என்றும், அதிகளவில் பிளாஸ்மா தானம் வழங்க ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.

சோழவந்தான், மேலூர், உசிலம்பட்டி பகுதிகளில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும், மதுரை அருகே அம்பலகாரன் பட்டி, சக்கிமங்கலத்தில் புதிய தொழிற்பேட்டைகள் அமைவதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

மதுரை மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக செயல்படுவதாகவும், வண்டியூர் கண்மாய் தூர்வாரப் பட்டுள்ளது என்றும், பாலமேடு சாத்தையாறு அணை ஆழப்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை நகரில் குடிநீர் ஆதாரங்களுக்காக, வைகையாற்றின் குறுக்கே படுகை அணைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வைகை ஆற்றின் உள்ளே சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், மதுரை மாவட்டம் செக்கானூரணியில் ரயில்வே லெவல் கிராசிங் அருகே மேம்பாலமும், மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே மேம்பாலம் கட்டப்படும்.

தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் கொரோனா காலத்தில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார், தமிழக முதல்வர் பழனிச்சாமி.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது … தமிழக அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயக்குமார், மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராசன் செல்லப்பா, மாணிக்கம், சரவணன், பெரியபுலான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

மத்திய அரசின் விவசாய சட்டம்… கருத்துகள் சில..!

அவன் வாயில் பால் ஊற்றி சாகாமலே வைத்து அரசியல் செய்வோம் என கிளம்பியிருக்கின்றன எதிர்கட்சிகள்

சமையல் புதிது.. :

சினிமா...

எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை… மீண்டும் சீரியஸ்!

. பிரபல பிண்ணனிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் ஆரோக்கிய நிலை அபாயகரமாக உள்ளதாக தெரிகிறது.

இந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி!

ரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.

Source: Vellithirai News

என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்:  நடிகர் அஜித் எச்சரிக்கை!

தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

சூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு!

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: Vellithirai News

நீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்! பதில் சொல்லுங்க சார்..!

சூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்!  Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...

Translate »