- Ads -
Home கிரைம் நியூஸ் மதுரை: மீட்புப் பணியில் உயிரிழந்த தீயணைப்பு வீரரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை!

மதுரை: மீட்புப் பணியில் உயிரிழந்த தீயணைப்பு வீரரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை!

suicide
suicide

மதுரை: மதுரையில் தீபாவளியன்று ஏற்பட்ட தீ விபத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த தீயணைப்பு வீரர் சிவராஜ் என்பவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. சிவராஜின் மனைவி அங்கையற்கண்ணி கணவர் இறப்பிற்கு பிறகும் கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சிவராஜ் மறைவிற்கு தமிழக அரசு சார்பாக இழப்பீடு அறிவித்திருந்தனர். அந்த பணத்தை பிரிப்பதில் இரு வீட்டிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனால், அங்கையர்க்கன்னி தாயார் வீட்டிற்கு தனது இரு குழந்தைகளுடன் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கணவன் இறப்பால் மனஉளைச்சலில் இருந்து வந்த அங்கையற்கண்ணி வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

ALSO READ:  பிரதமர் மோடி, அண்ணாமலையை தவறாக சித்திரித்து வீடியோ வெளியிட்டவரை கைது செய்க: பாஜக., ஆர்ப்பாட்டம்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version