
காரியாபட்டி அருகே 300 ஆண்டுகளுக்கு பிறகு அருணாச்சல ஈஸ்வரர் – ஆனந்தநாயகி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே 300 ஆண்டுகளுக்கு பிறகுஅருணாச்சல ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியம் பெரிய ஆலங்குளம் கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஈஸ்வரர் கோவில் பல ஆண்டுகளாக சிதைந்த கட்டிடமாக காணப்பட்டது. கிராம மக்களின் தீவிர முயற்சியால், கோவில் திருப்பணி வேலைகள் செய்துமுடிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, மிருத்சங்கிரஹனம், ஜெப பாராயணம், மஹா பூர்ணாஹுதி , முதல் யாகசாலை பூஜை துவங்கப்பட்டது. இரண்டாம் கால பூஜை துவங்கப்பட்டு, ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், வருண ஹோமம், சுதர்சன ஹோமம், சுமங்கலி பூஜை, தனலெட்சுமி பூஜை , மகா பூர்ணாஹூதி முடிந்தவுடன் , புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு கோபுர கலசத்துக்கு சிவாச்சாரிகளால், மகா அபிஷேகம் செய்யப்பட்டது.
அதன்பிறகு, அருணாச்சல ஈஸ்வர் மற்றும் ஆனந்தநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
விழா முடிவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.