Home உள்ளூர் செய்திகள் மதுரை மதுரை: சாலை பணியின் போது சதுஸ்ர சிவலிங்க சிலை கண்டுபிடிப்பு!

மதுரை: சாலை பணியின் போது சதுஸ்ர சிவலிங்க சிலை கண்டுபிடிப்பு!

madurai chathura lingam
madurai chathura lingam

மதுரை: மதுரை தெப்பக்குளம் முதல் விரகனூர் இடையே 60 அடி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் நேற்றிரவு ஐராவதநல்லூர் இந்திராகாந்தி சிலை அருகே கொந்தகை கால்வாய் பகுதியில் உள்ள சாலையை தோண்டியுள்ளனர்.

அப்போது 2அடி உயரமுள்ள சதுஸ்ர லிங்க கற்சிலை ஒன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலைக்கு மாலை அணிவித்து தரிசனம் செய்தனர்.
இதனையடுத்து அந்த சிவன் சிலை ஐராவதநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ் மூலமாக தெற்கு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு வருவாய்த்துறை அதிகாரிகள் மூலமாக மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியக காப்பாளர் மருதுபாண்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.

முதற்கட்ட ஆய்வில் சதுஸ்ர வடிவ லிங்க வழிபாடு கிபி 10 மற்றும் 11ஆம் ஆண்டுகளில் பயன்பாட்டில் இருந்துள்ளது என்பதால் இது கிபி 11ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் முழுமையான ஆய்வுக்கு பின்னர் தெரியவரும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version