வேடசந்தூர் முன்னாள் அதிமுக., எம்.எல்.ஏ படுகொலை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் முன்னாள் அதிமுக., எம்.எல்.ஏ., ஆண்டிவேல் படுகொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் முன்னாள் அதிமுக., எம்.எல்.ஏ., ஆண்டிவேல் படுகொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிவேல் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். வேடசந்தூர் அருகே தண்ணீர்பந்தம்பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில் கழுத்தறுபட்ட நிலையில் அவரது உடல் கிடந்தது.

தகவல் அறிந்து அந்த இடத்துக்கு விரைந்த போலீஸார், ஆண்டிவேலின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப் பட்ட ஆண்டிவேல், 2001 முதல் 2006 வரை வேடசந்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.