விருதுநகர் அருகே கார் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த தம்பதி பலியாகினர்.
அவர்களது இரண்டு குழந்தைகளும் லேசான காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை பெருங்குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (30).இவர் அங்குள்ள
பிரபல புல்லட் கம்பெனியில் மேலாளராக பணிபுரிகிறார்.
மனோஜ், மற்றும் நித்திஷா(27) அவர்களது இரு குழந்தைகளான ஜெனிஷா ஸ்ரீ (வயது 9), பிரணவ் ஆதித்யா (வயது 8) ஆகியோருடன் நெல்லை நோக்கி சென்று கொண்டிருநதனர்.
விருதுநகர் புதிய பேருந்து நிலையம் அருகே சென்றுகொண்டிருந்த போது கோவில்பட்டியில் இருந்து விருதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து தனியார் பேருந்து மோதியதில் மனோஜ் வந்து கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளானது.இந்த
விபத்தில் மனோஜ், நித்திஷா தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
இவர்களது குழந்தைகள் ஜெனிஷா ஸ்ரீ (9), பிரணவ் ஆதித்யா ( 8) இருவரும் லேசான காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன