திருவாடானை அருகே மல்லனூர் கிராமத்தில் மாட்டு கொட்டகையில் மாடுகளை கட்டச் செல்லும் பொழுது மின்சாரம் பாய்ந்து ஒரு பெண் உயிரிழந்தார் .அவரைக் காப்பாற்ற முயன்றவரும் பலியானர். தகவலறிந்த போலீசார் உடலைப் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
திருவாடானை அருகே மல்லனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனி முத்து மனைவி கவிதா (36 )இவரது கணவர் ஆணி முத்து வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.இந்நிலையில் இவர் வீட்டில் கால்நடைகள் வளர்த்து வருகின்றார்.
செவ்வாய்க்கிழமை இரவு தொடர் மழை காரணமாக மாடுகளை மாட்டு கொட்டகைகள் கட்ட செல்லும் பொழுது கொட்டகையில் இருந்து மின்சாரம் பாய்ந்து கவிதா தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலே பலியானார். அலநல் சத்தம் கேட்டு அருகே உள்ள மணி மகன் கருப்பையா (46 )கவிதாவை காப்பாற்ற முயன்றுள்ளார் அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலே பலியானார்.தகவலறிந்த திருவாடானை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.