ராஜபாளையம்-சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதையை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மதுரை-செங்கோட்டை மற்றும் செங்கோட்டை-மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் திங்கள்கிழமை(செப்.5) முதல் 6 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக மதுரை-செங்கோட்டை சிறப்பு ரயில்கள் திங்கள்கிழமை முதல் (செப்.6 முதல் செப்.10 வரை) 6 நாள்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.
ராஜபாளையம்-சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதையை பலப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை-செங்கோட்டை சிறப்பு ரயில் மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை மதுரை சிறப்பு ரயில் ஆகியவை இன்று முதல் முதல் ரத்து செய்யப்படுகிறது.
வருகின்ற செப்டம்பர் 10 ஆம் தேதி வரை 6 நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படும் நிலையில் ரயில் பாதையை பலப்படுத்தும் பணிமுழுமையாக நிறைவடைந்த உடன் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.