

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போலீசாரின் விசாரணைக்கு பின் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் முதற்கட்ட விசாரணை துவங்கியுள்ளது.
அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியை சேர்ந்தவர்
தங்கப்பாண்டி(30) பி.காம் பட்டதாரியான தங்கபாண்டிக்கு கோகிலா தேவி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்
தங்க பாண்டி சாயப்பட்டறையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி தங்கபாண்டி எம்.டி.ஆர் நகரில் செளந்தர பாண்டியன் என்ற சமையல் தொழிலாளியின் வீட்டின் கதவை தட்டியுள்ளார் அப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நகை பணத்திற்காக ஆசிரியர் தம்பதியர் படுகொலை செய்யப்பட்டதால் இவரையும் கொள்ளையன் என நினைத்து அப்பகுதி மக்கள் போலீசில் ஒப்படைத்தனர் போலீசார் தங்கபாண்டியிடம் நடத்திய விசாரணையில் அவர் சற்று வித்தியாசமான முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது .
எனவே தங்கபாண்டிக்கு மனநிலை சரி இல்லை அவரை காப்பகத்தில் சேருங்கள் என போலீசார் அறிவுத்தியதால் அவரது குடும்பத்தார் தங்கபாண்டியை பிற்பகலில் ராமனுஜபுரத்தில் உள்ள மறு வாழ்வு மையத்தில் சேர்த்தனர் இதனையடுத்து எம்.டி.ஆர் நகர் மக்கள் தாங்கள் பிடித்து குடுத்த நபரை விட்டு விட்டீர்கள் என கூறி தாங்கள் சாலை மறியல் போரோட்டத்தில் ஈடுபடபோவதாக நகராட்சி சேர்மன் சுந்தரலட்சுமி வீட்டை
முற்றுகையிட்டதால் போலீசார் வேறு வழியின்றி மீண்டும் மாலையில் மறு வாழ்வு மையத்தில் இருந்து காவல் நிலையம் அழைத்து வந்தனர் .
ஆனால் தொடர்ந்து அவர் வித்தியாசமான முறையில் நடந்து கொண்டதாக கூறி அவரை இரவு மீண்டும் காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர் இந்நிலையில் காப்பகத்தில் இருந்த தங்க பாண்டிக்கு செப்டம்பர் 14 அதிகாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும்
அவரை காப்பக பணியாளர்களே அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர் .
ஆனால் தங்கப்பாண்டியின் இறப்பில் சந்தேகம்
இருப்பதாக புகார் தெரிவித்து தங்கபாண்டியின் உறவிணர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதைத்தொடர்ந்து நீதிபதி முத்து இசக்கி விசாரணை நடத்தினார் நீதிபதி உத்தரவாதத்தின் பேரில் தங்கப்பாண்டி உடலை உடற்கூறாய்வு செய்ய உறவினர்கள் அனுமதித்தனர் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட தங்கபாண்டி உடலை
அவரது உறவினர்கள் தற்போதுவரை வாங்க மறுத்து வருகின்றனர்.
சிபிசிஐடி வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டு விட்டதால் தங்கபாண்டி உடலை அவரது உறவிணர்கள் இரண்டு நாட்களுக்குள் வாங்க வேண்டுமென
உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவு பிறப்பித்தது இந்நிலையில் சிபிசிஐடி போலீசாரின் முதல் கட்ட விசாரணை துவங்கியது விருதுநகர் சிபிசிஐடி டிஎஸ்பி சரவணன் தலைமையில்
சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சாவித்திரி தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் விஜயகுமார் உள்ளிட்ட சிபிசிஐடி போலீஸார் தங்கபாண்டி மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர் முதலில் தங்கப்பாண்டி விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட நகர் காவல் நிலையத்திலும் அதைத்தொடர்ந்து எம்.டி.ஆர் நகர் பகுதியிலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்