To Read it in other Indian languages…

Home உள்ளூர் செய்திகள் மதுரை கடன் வாங்கினீங்களே; எந்த திட்டங்களுக்கு செலவழிச்சீங்கன்னு சொல்ல முடியுமா?

கடன் வாங்கினீங்களே; எந்த திட்டங்களுக்கு செலவழிச்சீங்கன்னு சொல்ல முடியுமா?

உங்களால் செய்ய முடியவில்லை என்றால் அதை சொல்லாமல் வீண் பொய் சொல்ல கூடாது திமுக நிர்வாகத்தில் தோல்வி

திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஒன்னரை ஆண்டு காலத்தில் 2 லட்சத்து 28 ஆயிரம்  கோடி வாங்கிய கடனிற்கு எந்த மூலதன செலவிற்கு திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் பட்டியலிட்டு சொல்ல முடியுமா ? : சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி

வருகின்ற 29ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் இருக்கிறார் அதனை தொடர்ந்து கழக அம்மா பேரவை சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பிலும் ஆலோசனை டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோயிலில் கூட்டம் நடைபெற்றது

இதில் ஆர் பி உதயகுமார் பேசியதாவது

29ம் தேதி எடப்பாடியார் மதுரை மாநகர் ,மதுரை புறநகர் மேற்கு, மதுரை புறநகர் கிழக்கு ஆகிய மாவட்ட கழகம் சார்பில் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார், அவருக்கு எழுச்சி மிகுந்த வரவேற்பு அளிக்கும் வகையில் நாம் சிறப்பான ஏற்பாடு செய்திட வேண்டும் ,29ஆம் தேதி காலை விமான மூலம் மதுரைக்கு வருகிறார் அப்போது விருதுநகர் செல்லும் வழியில் கரிசல்பட்டியில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்படுகிறது, அதேபோல் மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் சிறப்பாக முறையில் நாம் பங்கேற்க வேண்டும்,

நிதியமைச்சர் ஊடகங்களில் சில குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்,

நிதி மேலாண்மை குறித்து அறிந்துள்ள நிதி அமைச்சருக்கு மக்களுடைய நாடி துடிப்பு தெரியவில்லை ,நான்கு தலைமுறை

அரசியல் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த நீங்கள் 30 ஆண்டுகளாக ஏன் கம்பெனியில் இருந்தீர்கள், 

30 ஆண்டு காலம் கம்பெனியில் ஊதியம் பெற்றவர் நிதி அமைச்சருக்கு அரசியல் என்பது வேறு கம்பேனி வேறு என்பது தெரியவில்லை,  

நிதி துறை ஆலோசகராக வேண்டுமானால் நீங்கள் சிறந்தவராக இருக்கலாம்,  ஆனால்  நீங்கள் சிறந்த நிதி அமைச்சர் அல்ல, 

மக்கள் இறந்த பின்னர் நிதிபற்றாக்குறையை போக்கி என்ன பயன். 

2011 கருணாநிதி முதல்வராக இருந்தபோது 1.14 லட்சம் கோடி கடன் இருந்தது, கடந்த 10 ஆண்டு காலம் அதிமுக ஆட்சியில் 4 லட்சத்து 80 ஆயிரம் கோடியாகவும்  இருந்தது, அதில் அனைத்தும் மூலதன செலவு செய்யப்பட்டது குறிப்பாக புதிய ஆறு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன,  மத்திய அரசு பங்களிப்புடன் 11 மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டன, அதே போல் சாலை வசதி கட்டமைப்பு வசதிகள் எல்லாம் உருவாக்கப்பட்டது. 

 திமுக ஆட்சியில் 2021-2022  ஆண்டில்  மட்டும் ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது,  2022 -2023 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி வாங்க அறிவிக்கப்பட்டது ஆக இந்த ஓன்னரைஆண்டு காலத்தில்  2 லட்சத்து 28 ஆயிரம்  கோடி கடன் வாங்கி உள்ளீர்கள்,  வாங்கிய கடனுக்காக எந்த மூலதன செலவிற்கு திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் பட்டியலிட்டு சொல்ல முடியுமா?  நீங்கள் வெளியிட்டது வெள்ளைஅறிக்கையா அல்லது வெள்ளரிக்காயா என்று தெரியவில்லை

நிதி அமைச்சர் பேச்சில் வல்லவர்களாக இருக்கலாம், செயல் வடிவில் அல்ல உங்களுக்கு முன்பாக அமைச்சராகி நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்துள்ளோம்,

நீங்கள் மட்டுமே மேதாவி போல் பேச கூடாது, திராவிட பாரம்பரிய குடும்பத்த்தை சேர்ந்தவர் நிதி அமைச்சராக இருப்பது  பெருமையாக உள்ளது, 

பத்து வருஷம் அமைச்சராக இருந்த எனக்கு அடிப்படை கூட தெரியவில்லை என்று நிதி அமைச்சர் கூறுகிறார், தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது இந்த நிதி எல்லாம் எங்கே போய் சேரும் அந்தத் துறைகளுக்கு தானே சேரும், அதுவும் தமிழ்நாடு அரசு தானே, அந்த துறைக்கு அமைச்சராக இருப்பவர் நேரு தானே, ,நலத்திட்டத்துக்கான அந்த வருவாய் செயல்படுத்தப்படுகிறது என்பது எல்லா மக்களுக்கும் தெரியும்,

கொடுக்க மனமில்லை என்று சொல்லுங்கள், அதற்கு தகுந்த பதிலடியை மக்கள் உங்களுக்கு லழங்குவார்கள்,

சமூக நீதி என்று பேசுகிறீர்கள் ஆனால் அந்த சமூக நீதியை நிலை நிறுத்தும் வண்ணம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு புரட்சித்தலைவி அம்மா 69 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்துள்ளார், மற்ற எல்லா மாநிலங்களும் 50 சதவீதம் தான் உள்ளன,  அதேபோல் எடப்பாடியார் 7.5 சகவீத இட ஓக்கீட்டை  வழங்கினார்,அதன் மூலம் இன்றைக்கு அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பு பயன்பெற்று வருகிறார்கள் ,சமூக நீதியை சத்தம் இல்லாமல் சாதித்தார் எடப்பாடியார் ஆவார்,

திராவிட மாடல் என பேசும் நீங்கள் சம நிலை கொண்டு வருவோம் என்பதை வரவேற்கிறோம், ஆனால் இன்றைக்கு மாணவிகளுக்கு மட்டும்  புதுமைப்பெண் என்ற திட்டத்தின் மூலம் நிதியை வழங்குகிறீர்கள், மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் ஏன் இந்த பாரபட்சம், தாலிக்கு தங்கம் திட்டம் நாங்கள் வழங்கினோம் அதில் குடும்பத்தார்கள் அனைவரும் பயன்பெற்றார்கள்,

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம், இருசக்கர வாகனம் வழங்கும் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் ரத்து செய்துள்ளதாக கூறிய நிதி அமைச்சர்  கூறியுள்ளார், கடந்த 2019- 2020 ஆம் ஆண்டில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் 1,04,765 பேர்

பயன் அடைந்துள்ளனர், 2020-2021 ஆம் ஆண்டில் கூட தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு 726.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,

கொரோனோ பேரிடர் காலத்தில் தாலிக்கு தங்கம், மடிக்கணினி, இருசக்கர வாகனம் வாங்கும் திட்டங்கள்  தள்ளி வைக்கப்பட்டதே தவிர, திட்டத்தை ரத்து செய்யவில்லை

கொரோனோ காலத்தில் தங்கம், மடிக்கணினி, இருசக்கர வாகனம் கொள்முதல் செய்ய முடியாத நிலை இருந்தது

பேரிடர் காலங்களில் திட்டங்களை தள்ளி வைத்தது வேறு, தற்போது கொள்கை ரீதியாக திட்டங்களை ரத்து செய்து வேறு ,ஆனால் இன்றைக்கு திட்டங்களை திமுக அரசு ரத்து செய்துள்ளனர் 

திட்டங்களை அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டதாக நிதி அமைச்சர் கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலாகும், நிதி அமைச்சர் பொய் சொல்கிறார்

நிதி அமைச்சர் சொல்வது நகைச்சுவையாக உள்ளது, உங்களால் செய்ய முடியவில்லை என்றால் அதை சொல்லாமல் வீண் பொய் சொல்ல கூடாது திமுக நிர்வாகத்தில் தோல்வி அடைந்துள்ளது,  

நீட் தேர்வை ரத்து செய்வோம்  என பொய் சொல்லி ஆட்சிக்கு வந்துள்ளது திமுகஆகும்,நிதி அமைச்சர் சொல்லும் நிதி நிலைமை கம்பெனி கணக்கிற்கு வேண்டுமானால் சரியாக இருக்குமே தவிர ஏழை எளிய மக்களுக்கு எந்த பலனளிக்காது ,அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை கொள்கை ரீதியாக ரத்து செய்தது திமுக ஆகும், ,சாமானிய மக்களின் சுவாசத்தை நிறுத்தி விட வேண்டாம் என்று பேசினார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

19 − 11 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version