செங்கோட்டை – மதுரை ,மதுரை – செங்கோட்டை பகல் நேர ரயில்கள் மீண்டும் ராஜபாளையம் -சங்கரன்கோவில் இடையே சீரமைப்பு பணிகள் காரணமாக அக்31வரை ரத்து செய்யப்பட்டுள்ளது . ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும்.
ராஜபாளையம் – சங்கரன்கோவில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை – செங்கோட்டை , செங்கோட்டை – மதுரை – பகல்நேர ரயில் ரத்து அக்டோபர் 8 முதல் அக்டோபர் 30 வரை ரத்து செய்யப்படுகிறது.
ராஜபாளையம் – சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – செங்கோட்டை (06663), செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை – மதுரை (06664) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் அக்டோபர் 8 முதல் அக்டோபர் 30 வரை முழுமையாக ரத்து செய்யப்படும்.ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் வழக்கம்போல் இயங்கும் என தென்னக ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது.
