மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவடைந்தது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுயில் வென்றவர்களுக்கு முதல்வர் உருவப் படம் பொறித்த தங்கக் காசு வழங்கப்பட்டது.28 காளைகளை அடக்கி களத்தில் சிறந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளளார் மாடு பிடி வீரர் விஜய்.
பொங்கல் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது ஜல்லிக்கட்டு தான். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காண உலகெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டிற்கு வருவார்கள். மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு திருவிழா தை முதல் நாளான மதுரை அவனியாபுரத்தில் இன்று துவங்கியது.
தொடர்ந்து நாளை பாலமேடு, 17ம் தேதி அலங்காநல்லூரிலும் அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு நடக்கிறது. தென்கால் பாசன விவசாயிகள் சங்கம், மற்றும் அவனியாபுரம் கிராம கமிட்டி இடையே உடன்பாடு ஏற்படாததால், அவனியாபுரம் ஜல்லிக்கட்டை இம்முறையும் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகமே ஏற்று நடத்துகிறது. இதனைத்தொடர்ந்து மாநகராட்சி சிறப்பு நிதியில் இருந்து ரூ.17.63 லட்சம் ஒதுக்கி விழா மேடை, வாடிவாசல், பார்வையாளர் மேடை மற்றும் தடுப்பு வேலிகள், காளைகளுக்கான கால்நடை பராமரிப்புத்துறை பரிசோதனை மையம் ஆகியவற்றின் பணிகள் முடிந்து தயார் நிலையில் இருந்தனர்.
சுகாதாரத்துறை சார்பில் 30 மருத்துவர்கள், 54 செவிலியர்கள் உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் 3 பிரிவுகளாக உள்ளனர், இவர்கள் வீரர்கள், பொதுமக்களுக்கு காயம் ஏற்பட்டால் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதேபோல், காளைகள் காயம்பட்டால் சிகிச்சையளிக்க 30 கால்நடை மருத்துவர்கள், 63 கால்நடை உதவி ஆய்வாளர்கள் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு களிக்கும் வழியில் அவனியாபுரத்தில் 7 இடங்களில் பெரிய எல்இடி திரைகள் பொருத்தப்பட்டுள்ளன. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4 மணி வரை நடைபெறும். அதிக காளைகளை அடக்கிய வீரருக்கு கார் மற்றும் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பரிசுகள் அனைத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக வழங்கப்பட்டது.
இந்த நிலையில் காலையில் தொடங்கி 11 சுற்றுகளாக விறுவிறுப்பாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவடைந்தது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 28 காளைகளை அடக்கி முதலிடம் பெற்ற விஜய்க்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல்வர் மு.க ஸ்டாலின், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உருவம் பொறித்த தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள் வெற்றிப் பெற்ற ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் வழங்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை(ஜன.15) காலை 8 மணியளவில் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கப்பட்டது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 5 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 35 காளைகள் வெளியேற்றப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விஜய் 28 காளைகள் பிடித்து முதலிடம் பிடித்தார் மதுரை மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் மிக உற்சாகமாக ஜல்லிக்கட்டு நடைபெற்று முடிந்துள்ளது. காலை 7.30 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4 மணியளவில் நிறைவடைந்ததுள்ளது. இதனிடையே அழகுபேச்சி என்ற பள்ளி மாணவி தனது காளையை களத்தில் அவிழ்த்துவிட்ட நிலையில் அதனை மாடுபிடி வீரர் விஜய் லாவகமாக அடக்கினார். இதையடுத்து ஜல்லிக்கட்டு விழா குழு சார்பாக அவருக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. அந்த பரிசுகளை பெற்ற வீரர் விஜய், ஏமாற்றத்துடன் தனது காளையை கயிறு போட்டு பிடித்துச் செல்ல முயன்ற பள்ளி மாணவி அழகுபேச்சியிடம் கொடுத்து அவரை ஊக்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தார்.
இது போல் செய்ய வேண்டும் என்ற மனசு எத்தனை பேருக்கு வரும் என்றும் தெரியாது. கிடைத்த வரை லாபம் எனக் கருதும் இந்தக் காலத்தில் தனக்கு வழங்கப்பட்ட பரிசை காளையின் உரிமையாளருக்கே வழங்கி கவனம் ஈர்த்திருக்கிறார் மாடுபிடி வீரர் விஜய். மாடுபிடி வீரர் விஜய் மின் வாரியத்தில் ஹேங் மேனாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 28 காளைகளை அடக்கி களத்தில் சிறந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள விஜய், ஜல்லிக்கட்டு வளர்ப்போரை ஊக்கப்படுத்தும் விதமாக தனக்கு தரப்பட்ட அண்டா, குண்டா உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை எந்தக் காளையை தாம் அடக்கினோரோ அந்த காளையின் உரிமையாளருக்கே வழங்கினார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய் 28 காளைகள் பிடித்து தொடர்ந்து முதலிடம். அவனியாபுரம் கார்த்தி 17 காளைகள் பிடித்து 2வது இடம். விளாங்குடி பாலாஜி 14 காளைகள் பிடித்து 3வது பிடித்தார் அமைச்சர் மூர்த்தி சிறந்தமாடுபிடி வீரர் என்ற அடிப்படையில் விஜய்க்கு இன்று தங்கக்காசுகளை பரிசாக வழங்கினார். எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முடிந்ததால் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளது.