
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில்இன்று வெடி விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் ராமலட்சுமி என்பவருக்கு சொந்தமான ஸ்ரீநிதி பட்டாசு ஆலை வருவாய் துறை அலுவலரின் அனுமதி பெற்று செயல்பட்டு வருகிறது.

சுமார் 12 அறைகளில் 50 பேர் இன்று வழக்கம் போல் பட்டாசு உற்பத்தி பணிகளை மேற்கொண்டிருந்த போது புஷ்வானம் பட்டாசுக்கு தேவையான ரசாயன மூலப் பொருட்களை உட்செலுத்தும் பணியின் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அடுத்தடுத்த இரண்டு அறைகளில் தீ பரவியது. உடனடியாக அங்கிருந்த தொழிலாளர்கள் வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் 2 அரைகள் சேதம் அடைந்தது.
இந்த ஆலையில் ஏற்கனவே கடந்த ஆண்டு வெடி விபத்து ஏற்பட்டு சீல் வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் விதிமுறை மீறல் சரி செய்யப்பட்டு கடந்த சில நாட்களாக பட்டாசு உற்பத்தி பணிகள் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.