நகைக்காக மூதாட்டியை கொலை செய்த பெண்ணிற்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜபாளையம் அருகே ஜெயலட்சுமி(68) என்ற மூதாட்டியை நகைக்காக கொலை செய்த தங்கேஸ்வரி(47) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
ராஜபாளையம் அருகே முகவூர் பகுதியை ஜெயலட்சுமி(68). இவர் நகைகளை அடகு பெற்று வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் ஜெயலட்சுமி கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி இரவு வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீஸ் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சேவுகபாண்டியன் மனைவி தங்கேஸ்வரி(47) என்பவர் ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள நகைக்காக மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து தளவாய்புரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து தங்கேஸ்வரியை கைது செய்தனர். வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி பகவதி அம்மாள் தங்கேஸ்வரிக்கு ஆயுள் தண்டனை மற்றுள் ரூ.3 ஆயிரம் அபதாரம் விதித்து உத்தரவிட்டார்.