- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் தேய்பிறை பஞ்சமி வாராஹி சிறப்பு அபிஷேகம்!

தேய்பிறை பஞ்சமி வாராஹி சிறப்பு அபிஷேகம்!

அம்மனுக்கு அர்ச்சனைகளும், தொடர்ந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது. திருக்கோவிலிலே, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில், வராகி மற்றும் துர்க்கை

#image_title
varaahi abhishekam

மதுரை: மதுரை அண்ணா நகர் மேலமடை சௌபாக்கி விநாயகர் ஆலயத்தில், தேய்பிறை பஞ்சமி முன்னிட்டு, வராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமங்கள் அபிஷேகம் நடைபெற்றது.

இத்த திருக்கோவிலிலே மாதந்தோறும் வளர்பிறை பஞ்சமி மற்றும் தேய்பிறை பஞ்சமி நாட்களில், காலை 9 மணி அளவில் வராகி அம்மன் சன்னதியில் சிறப்பு ஹோமங்களும், அதைத் தொடர்ந்து, அபிஷேக அர்ச்சனை வழிபாடுகள் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, வராஹி அம்மனுக்கு பக்தர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதை அடுத்து அம்மனுக்கு அர்ச்சனைகளும், தொடர்ந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது. திருக்கோவிலிலே, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில், வராகி மற்றும் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறும் .

பஞ்சமி நாட்களில் பக்தர்கள் வராகி அம்மனுக்கு பூசணிக்காய் விளக்கேற்றி வழிபடுவது வழக்கமாகக் கொண்டுள்ளனர். தேய்பிறைப் பஞ்சமியை, முன்னிட்டு வராஹி அம்மனுக்கு பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டுச் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை, ஆலய ஆன்மிக குழுவினர் மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

ALSO READ:  சபரிமலை மேல் சாந்தி தேர்வுக்கு... இன்று நடைதிறப்பு!
ரவிச்சந்திரன், மதுரை

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version