சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக 30 கோடிக்கு மேல் மோசடி செய்த 18 பேர் மீது வழக்கு 10 பேர் கைது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலைவனத்ததைச் சேர்ந்த அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை சசி மற்றும் அவரது கணவர் மல்லாங்கிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரியும் கிருஷ்ணசாமி என்ற இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஐம்பதிற்கும் மேற்பட்டவர்களிடம் ரூ 50 லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக வந்த புகாரின் பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி சசி மற்றும் அவரது கணவர் கிருஷ்ணசாமியை கைது செய்து விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன
திருப்பூரைச் சேர்ந்த நாகேந்திர குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார் அவரின் உருதுணை யோடு தமிழகத்தில் 400க்கும் மேற்பட்டவர்களிடம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ரூபாய் 30 கோடிக்கு மேல் சுருட்டியதாக தெரியவந்துள்ளது.
மேலும் காரியாபட்டியைச் சேர்ந்த சின்ன சுப்பையா ஆதிமூலம் நாராயணசாமி கமுதி தோப்படி முத்துஉள்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் விசாரணையில் சென்னையைச் சேர்ந்த விஜயலட்சுமிஜெயந்தி
என்பவர் அரசு முத்திரையுடன் கூடிய பணி நியமன ஆணை மற்றும் பயிற்சி ஆணை வழங்கியதும் அதற்கு உடந்தையாக செய்யது அகமது என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி என கூறிக்கொண்டு பயிற்சியாளராக இருந்து வந்ததாகவும் சென்னையைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர் கோயம்புத்தூர் கோபிசெட்டிபாளையம் மணிகண்டன் உடன் இணைந்து தனியாக உயர் நீதிமன்ற வெப்சைட் தொடங்கியதாகவும் அதன் அடிப்படையில் சிபிசிஐடி மூலமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தையே ஏமாற்றும் அளவிற்கு நீதிமன்றத்தின் பெயரை பயன்படுத்திய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டுமெனவும் நேரடி நியமன டிஎஸ்பி தலைமையில் விசாரணை செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தன் அடிப்படையில், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்திரி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் நாகேந்திர குமாரை கஸ்டடி எடுத்து விசாரித்ததில் மேற்படி சென்னை சேர்ந்த மூவருடன் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது
உடனடியாக சென்னை சென்ற காவல்துறையினர் மேற்படி விஜயலட்சுமி ஜெயந்தி உள்பட மூவரை கைது செய்து விருதுநகர் கொண்டு வந்தனர்
மேலும் அவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தமிழகத்தில் இதே போல் வேறு எங்கெல்லாம் ஏஜென்சி அமைத்து மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என விசாரணை செய்து வருவதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது மேலும் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்து இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது
செய்தி: சக்தி பரமசிவம்