- Ads -
Home உள்ளூர் செய்திகள் மதுரை பிரதமர் மோடி பிறந்த நாள்; இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்!

பிரதமர் மோடி பிறந்த நாள்; இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்!

மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜகவினர். புதிதாக கட்சியில் இணைந்த உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டைகளை வழங்கி

#image_title
modiji birthday celeb in madurai

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டியில் பாரத பிரதமர் மோடியின்
74- வது பிறந்தநாளை முன்னிட்டு, பாஜக நிர்வாகிகள் இனிப்பு வழங்கியும், புதிய உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கியும் கொண்டாடினர்.

இந்திய திருநாட்டின் பிரதமர் நரேந்திர மோடி , தனது 74வது பிறந்த நாளை கொண்டி வருகிறார். அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் சூழலில்., பாஜகவினரும் நாடு முழுவதும் பிரதமர் மோடியின் பிறந்த நாளை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு மதுரை பெருங்கோட்ட பொருப்பாளர் கதளிநரசிங்க பெருமாள் தலைமையிலான பாஜக நிர்வாகிகள் பாரத பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து கோசங்களை எழுப்பினர்.

ALSO READ:  செங்கோட்டையில் இலவச இயற்கை யோகா மருத்துவ முகாம்!

தொடர்ந்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜகவினர். புதிதாக கட்சியில் இணைந்த உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டைகளை வழங்கி கொண்டாடினர்.

ரவிச்சந்திரன், மதுரை

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version