ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாளுக்கு, திருமலை திருப்பதி கோவில் பட்டு வஸ்திரம் சாற்றப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கலைந்த மாலை, வஸ்திரம், கைக்கிளி உள்ளிட்ட மங்களப் பொருட்கள் ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலை பிரம்மோற்சவத்தில் கருட சேவையின் போது வெங்கடாஜலபதி பெருமாள் அணிவதற்காக கொண்டு செல்லப்பட்டது.
அதற்கு பதில் மரியாதையாக திருப்பதி திருமலை கோவிலில் இருந்து அனுப்பிய மாலை, வஸ்திரம் ஆகியவை ஆண்டாளுக்கு சூட்டப்பட்டடு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் குழு தலைவர் பி.ஆர். வெங்கட்ராமராஜா அறங்காவலர்கள், கோவில் செயல் அலுவலர் செள. சக்கரை அம்மாள் மற்றும் கோவில் அலுவலர்களும், திருக்கோவில் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.