சோழவந்தான் மற்றும் தென்கரை, திருவேடகம், மன்னாடிமங்கலம், பேட்டை மேலக்கால் ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது தீபாவளிக்கு முன்பு வரக்கூடிய பிரதோஷ விழா என்பதால் சிவ பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
சோழவந்தான் பிரளையநாத சுவாமி கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால் தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது இதைத்தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் சிறப்பு அர்ச்சனை நடைபெற்று சுவாமியும் அம்பாளும் ரிஷபவாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தனர்.
இதில் எம் விஎம் குழும தலைவர் மணி முத்தையா, கவுன்சிலர்கள் வள்ளி மயில், மருது பாண்டியன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலிலும், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும், தென்கரை மூலநாத சுவாமி கோவிலிலும், பேட்டை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் மேலக்கால் ஈஸ்வரன் கோவிலிலும் பிரதோஷ விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.