- Ads -
Home உள்ளூர் செய்திகள் மதுரை காதைப் பிளக்கும் ஹாரன்; அதிரடியாக அகற்றிய போக்குவரத்து காவல்துறை!

காதைப் பிளக்கும் ஹாரன்; அதிரடியாக அகற்றிய போக்குவரத்து காவல்துறை!

காதை பிளக்கும் ஹாரன் அதிரடி சோதனைகள் நடத்தி அகற்றிய போக்குவரத்து காவல்துறை!

காதை பிளக்கும் ஹாரன் அதிரடி சோதனைகள் நடத்தி அகற்றிய போக்குவரத்து காவல்துறை!

மதுரை மாநகரில் அதிக அளவு ஒளி எழுப்பக்கூடிய மியூசிக்கல் ஹாரன் கனரக வாகனங்கள் முதல் இருசக்கர வாகனங்கள் வரை பயன்படுத்தி வருகின்றன. நாள்தோறும் இது குறித்து புகார்கள் எழுந்து வந்தது.

இந்த நிலையில், இன்று மதுரை காளவாசல் பகுதியில் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி மதுரை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூர்ண கிருஷ்ணன் மற்றும் நந்தகுமார் தெற்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செல்வம் ஆகியோர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் சுமார் 20க்கும் மேற்பட்ட லாரி மற்றும் தனியார் பேருந்துகளில் அதிக அளவு சத்தம் எழுப்பக்கூடிய ஹாரன்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதமும் விதித்தனர்.

ALSO READ:  சாம்பியன்ஸ் ட்ராபி: இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுகிறது நியூஸிலாந்த்!

இது குறித்து, காவல் துறையினர் நம்மிடம் தெரிவித்த போது அதிக அளவு சத்தம் கொண்ட மியூசிக்கல் ஆரன்களை யாரும் பயன்படுத்தக் கூடாது எனவும், இது பின்னால் வரும் வாகனங்களுக்கு ஒரு பயத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தும் எனவும் மேலும் அதிக ஒளி எழுப்பதால் காது செவித்திறன் பாதிக்கப்படும் எனவும் மீண்டும் அவர்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் வட்டார போக்குவரத்து தகவல் தெரிவித்தனர். இதுபோன்று தொடர்ந்து நடவடிக்கை அனைத்து பகுதிகளும் மேற்கொள்ளப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version