- Ads -
Home உள்ளூர் செய்திகள் மதுரை பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள், தல வரலாறு பயிற்சி பட்டறை!

பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள், தல வரலாறு பயிற்சி பட்டறை!

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள் மற்றும் தல வரலாறு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள் மற்றும் தல வரலாறு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

மதுரை, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள் மற்றும் தல வரலாறு பயிற்சி பட்டறை கல்லூரி நூலகம், சமஸ்கிருத துறை மற்றும் காந்திகிராம் லக்ஷ்மி கல்வியியல் கல்லூரி சார்பில் நடைபெற்றது. கல்லூரி இறை வணக்கம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து உடன் நிகழ்ச்சி தொடங்கியது. சமஸ்கிருதத்துறை தலைவர் முனைவர் ஸ்ரீதர் சுவாமிநாதன் வரவேற்புரை ஆற்றினார்.

கல்லூரிச் செயலர் சுவாமி வேதானந்த, கல்லூரி குலபதி சுவாமி அத்யாத்மானந்த ஆசியுரை வழங்கினர். ஆர். எஸ். எஸ் .மண்டல பி.ஆர்.ஓ.கணேஷ்பாபு துவக்க உரை ஆற்றினார். விவேகானந்த கல்லூரி மாணவர் சங்கச் செயலர் முனைவர் தீனதயாளன் கல்லூரியின் மேனாள் முதல்வர்  முனைவர் வன்னியராஜன் சிறப்புரை ஆற்றினர். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமை உரை ஆற்றினார்.

ALSO READ:  IPL 2025: மீண்டும் மும்பைக்கு எதிராக வென்ற பெங்களூர்

கல்லூரியின் மேனாள் துணை முதல்வர் முனைவர் இளங்கோ மேனாள் விலங்கியல் துறை பேராசிரியர் சந்திரன் கல்லூரியின் அகத்திர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு லட்சுமி கல்வியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் வின்சென்ட் ராஜசேகர் லட்சுமி கல்வியல் கல்லூரியின் நூலகர் முனைவர் சுவாமிநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பயிற்சி பட்டறையில் மேனாள் சமஸ்கிருத துறை தலைவர் பேராசிரியர் ஆனந்தராமன் கோவில்களில் பொதுவான வடிவமைப்பு என்ற தலைப்பிலும், கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் துறை உதவி பேராசிரியர் முனைவர்  கரிகாலன் ஒரு கோவிலின் வரலாற்றை எழுதுவதில் உள்ள சவால்கள் என்ற தலைப்பிலும், விவேகானந்த கல்லூரி சமஸ்கிருதத் துறை தலைவர் முனைவர் ஸ்ரீதர் சுவாமிநாதன் சிவபெருமானின் உருவ சின்னங்கள் என்ற தலைப்பிலும் சிறப்பு பட்டறை பயிற்சியுடன் உரையாற்றினர்.

இறுதி நிகழ்ச்சியில், கல்லூரி துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன் சிறப்புரை ஆற்றினார். கல்லூரி நூலகர் முனைவர் பிரபாகரன் நன்றி உரை ஆற்றினார். நிகழ்ச்சியினை வணிகவியல் துறை உதவி பேராசிரியர்கள் முனைவர் வடிவேல் மற்றும் முனைவர் வடிவேல் ராஜா ஒருங்கிணைத்தனர். நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.

ALSO READ:  பிடிஆர் மகன்கள் படித்த இரு மொழி என்ன தெரியுமா? அண்ணாமலை கிளப்பிய பரபரப்பு பதிலடிகள்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version