23/09/2019 2:48 PM

தோழமைக் கட்சிகள் போட்டியிடுவது குறித்து திமுக., தலைமை முடிவு செய்யும்! : வைகோ!




20 தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து திமுக., தலைமை முடிவு செய்யும் என்று, சாத்தூரில் வைகோ கூறினார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,  டிசம்பர் 15ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வாக்குச்சாவடிகளுக்கும் ம.தி.மு.க பணிக்குழு அமைக்கப்படும் என்றார்.

மேலும், திமுக தலைமையிலான அணி, 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் பிப்ரவரியில் வந்தாலும் வெற்றி பெறும்!  நாடாளுமன்ற தேர்தலுடன் வந்தாலும் வெற்றி பெறும். 40 நாடாளுமன்ற தொகுதியிலும் திமுக., தலைமையிலான அணியே வெற்றி பெறும்.

20 தொகுதிகளில் தி.மு.க போட்டியிடுமா அல்லது தோழமைக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்குமா என்பது குறித்து திமுக தலைமைதான் முடிவெடுக்கும் என வைகோ தெரிவித்தார்.

அதன் பின்னர் தொடர்ந்து மதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.







Recent Articles

அரபிக்கடலில் உருவாகும் ஹிகா புயல்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த சில நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, கடலோர ஆந்திரப் பகுதிகள் மற்றும் கர்நாடக பகுதி, மேற்கு மத்திய பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், அசாம், கிழக்கு ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

உயிர் காக்க பறந்து வரும் இரத்தம்; மருந்து பொருட்கள்.!

அந்த பாக்கெட் 4-6 மணி நேரத்திற்கு பதிலாக 30 நிமிடங்களில் தேவையில் இருக்கும் நோயாளியை சென்று அடையும்" என தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தில் டிக்டாக்; இளைஞருக்கு நேர்ந்த கதி.!

#தேசிய பேரிடர் மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு படையினர் 48 மணி நேரம் தேடி இன்று காலை சடலமாக தினேஷ் மீட்கப்பட்டார்.#

டிரம்புக்கு… தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாரா மோடி..?

ஹூஸ்டனில் நேற்று பாரதப் பிரதமர் மோடி ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய மோடி, தனது நண்பர் என்று கூறி டிரம்ப்பை அறிமுகப் படுத்திவைத்தார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் தொழிற்பயிற்சி அளிக்கப்படும்! செங்கோட்டையன்!

பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மாணவா்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தமிழக அரசு புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

Related Stories