மதுரை சித்திரைத் திருவிழா – 2015

மதுரை ஸ்ரீ மீனாக்ஷியம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா நேற்று(ஏப்ரல் 21,2015) நற்பகல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து, மாலையில் மதுரையின் நான்கு மாசிவீதிகளில் நடந்த திருவீதி உலாவில், ஸ்ரீ சுந்தரேஸ்வரர் உடனுறை பிரியாவிடை கற்பக விருட்ச வாகனத்திலும், ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று முதல் 17 நாட்களுக்கு வெகு விமரிசையாக இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன் விபரம் வருமாறு: ஏப்ரல் 21: செவ்வாய்க்கிழமை – கொடியேற்றம் , கற்பக விருட்சம், சிம்ம வாகனம் ஏப்ரல் 22: புதன்கிழமை – பூதவாகனம், அன்ன வாகனம், ஏப்ரல் 23: வியாழக்கிழமை – கைலாச பர்வதம், காமதேனு வாகனம், ஏப்ரல் 24: வெள்ளிக்கிழமை – தங்கப்பல்லக்கு ஏப்ரல் 25: சனிக்கிழமை – வேடர் பரி லீலை, தங்கக் குதிரை வாகனம், ஏப்ரல் 26: ஞாயிற்றுகிழமை – சைவ சமய ஸ்தாபித வரலாறு லீலை, ரிஷப வாகனம், ஏப்ரல் 27: திங்கட்கிழமை – நந்தீஸ்வரர், யாழி வாகனம், ஏப்ரல் 28: செவ்வாய்க்கிழமை – ஸ்ரீ மீனாக்ஷி பட்டாபிஷேகம், வெள்ளி சிம்ஹாசன உலா, ஏப்ரல் 29: புதன்கிழமை – ஸ்ரீ மீனாக்ஷியம்மன் திக்விஜயம், இந்த்ர விமான உலா, ஏப்ரல் 30: வியாழக்கிழமை – ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், யானை வாகனம், புஷ்பபல்லக்கு. மே 1: வெள்ளிக்கிழமை – திருத்தர், – சப்தாவர்ண சப்பரம் மே 2: சனிக்கிழமை – தீர்த்தம், – வெள்ளி ரிஷப சேவை. மே 3: ஞாயிற்றுக்கிழமை – தள்ளாகுளத்தில் எதிர்சேவை. மே 4: திங்கட்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் மே 5: செவ்வாய்க்கிழமை – வண்டியூர் தேனூர் மண்டபம், இரவு தசாவதார காட்சி – ராமராயர் மண்டபம். மே 6: புதன்கிழமை – காலை- மோகன அவதாரம், இரவு-புஷ்பபல்லக்கு மே 7: வியாழக்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் திருமலை எழுந்தருளல். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் திரு. கருமுத்துக் கண்ணன் அவர்களும், இணை ஆணையர் திரு. நடராஜன் அவர்களும் செய்து வருகின்றனர்.