டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் கண்ட கனவை நனவாக்குவதே நமது லட்சியம் என்று உறுதியாகக் கூறினார் பிரதமர் மோடி!

ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர்,

ராமநவமி நாளில், ராமபிரானுக்கு முக்கியத்துவம் வாய்ந்த  இந்தப் புனித பூமிக்கு வந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். காசியும் ராமேஸ்வரமும் மிகவும் புண்ணியம் வாய்ந்தவை. காசியின் எம்பி.,யாக ராமேஸ்வரம் மண்ணில் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் பிரதமர் மோடி.

மிஷன் சக்தி திட்டம் பெற்ற வெற்றியை அப்துல் கலாம் இருந்திருந்தால் பாராட்டி யிருப்பார் என்றும்,  அப்துல்கலாம் கண்ட கனவுகளை நாம் நிறைவேற்றி கொண்டிருக்கிறோம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

முன் எப்போதும் இல்லாத அளவில் வறுமையை ஒழிக்க பாடுபடுகிறோம் என்று கூறிய மோடி, சுகாதார துறையில் இந்தியா பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது என்றார்.

ஆயுஷ்மான் திட்டம் மூலம் 50 கோடி இந்தியர்கள் பயனடைந்துள்ளனர் என்று குறிப்பிட்ட மோடி,  பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீர் மேலாண்மைக்கு தனி அமைச்சகம், மீனவர்களுக்கான தனி அமைச்சகம் மற்றும் மீனவர்களுக்கும் கிஷான் கிரெடிட் கார்டு வழங்கப்படும் என்றார் !

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் நீர் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், இஸ்ரோ உதவியுடன் மீனவர்களுக்கு தொழில்நுட்ப கருவிகள் மற்றும் கடலில் மீனவர்களுக்கு உள்ளூர் மொழியிலேயே அறிவிப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தார் பிரதமர் மோடி.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிபடக் கூறினார் பிரதமர் மோடி.

நாம் சிறந்த அறிஞரும், அறிவியலாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாமுக்கு சிறந்த நினைவிடம் அமைத்திருக்கிறோம். இதற்கு முன்னர் காங்கிரஸில் முக்கியத் தலைவர்களாகவும், ஜனாதிபதிகளாகவும் இருந்த தமிழர்களான ஆர்.வெங்கட்ராமன், எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு காங்கிரஸ் ஏதாவது மரியாதை செய்திருக்கிறதா? கேரளாவில் இருந்து வந்த ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கு எந்த மரியாதையும் கொடுக்காமல்,
ஒரே ஒரு குடும்பத்துக்கு மட்டுமே அனைத்தையும் சொந்தமாக ஆக்கியிருக்கிறார்கள். சிறிய கிராமம் நகரம் என எதிலும் விட்டு வைக்காமல், சாலை களுக்கு அந்தக் குடும்பத்தின் பெயர் சூட்டியிருக்கிறார்கள்… என்று பேசினார் மோடி.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...