
பணத்தை தவறவிட்ட வெளிமாநில குடும்பத்தினரை பணம் கொடுத்து மனிதாபிமானத்தோடு சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர் நெல்லை மாவட்டம் ஊத்துமலை போலீசார்!
ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வீராரெட்டி என்பவர் தனது மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் சங்கரன்கோவிலில் வேலை வாங்கித் தருவதாக யாரோ ஒரு தெரியாத நபர் சொல் பேச்சைக் கேட்டு வந்துள்ளார்.
அந்த நபரின் பேச்சை நம்பி வந்த வீரா ரெட்டி வந்த இடத்தில் தான் வைத்திருந்த 7000 ரூபாய் மற்றும் செல்போனை தவற விட்டுள்ளார். பின்பு வழி தெரியாமல் ஊத்துமலை பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார்கள்.
பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர்களை உதவி ஆய்வாளர் பயிற்சி ஜெய்சங்கர் விசாரணை செய்து காவல் நிலையம் அழைத்து வந்து பிரச்னையைக் கேட்டறிந்துள்ளார்.
பின்னர் அவர்கள் சொந்த ஊர் ஆந்திரா செல்வதற்கு தேவையான பணம் ரூ.4,500ஐ ஊத்துமலை காவலர்கள் பிரித்து அவர்களிடம் கொடுத்து மனிதாபிமானத்தோடு அனுப்பி வைத்தனர்.
மனிதாபிமானத்தோடு செயல்பட்ட காவலர்களை ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்.