தில்லி தப்ளீக் ஜமாத் மாநாடு சென்று வந்தோரை தனிமைப் படுத்த குமரி மாவட்ட இந்து முன்னணி கோரிக்கை!

தப்ளிக் ஜமாஅத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தில் உள்ள அனை வருக்கும் உடனடியாக தனிமைப்படுத்தி கொரோனா மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்

tabliqjamat2

தில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு, உடனடி சிகிச்சை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொற்று பரவாமல் காப்பாற்ற வேண்டும் என்றும் குமரி மாவட்ட இந்து முன்னணியின் சார்பில் அதன் மாவட்டத் தலைவர் மிசா சி சோமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

hindumunnani petition

உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வணக்கம். டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த நபர்கள் பங்கேற்று உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்ற தெலங்கானாவை சார்ந்த ஆறு பேரும் மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதியை சார்ந்த ஒரு நபரும் இறந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து டில்லி மாநாட்டில் கலந்து கொண்ட நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்திய நாட்டின் நலம் கருதியும் கன்னியாகுமரி மாவட்டம் மக்களின் நலம் கருதியும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து டெல்லியில் நடைபெற்ற தப்ளிக் ஜமாஅத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தில் உள்ள அனை வருக்கும் உடனடியாக தனிமைப்படுத்தி கொரோனா மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வசித்து வரும் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நோய் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தை கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணி சார்பில் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்… என்று மிசா C.சோமன் அளித்துள்ள மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :