ஏப்ரல் 20, 2021, 4:12 காலை செவ்வாய்க்கிழமை
More

  புரெவி… இன்று இரவு கரை கடக்கும்! கனமழை எச்சரிக்கை!

  இன்று இரவு பாம்பனுக்கும் கன்யாகுமரிக்கும் இடைப்பட்ட பகுதியில் கரை கடக்கும் என்று வானிலை அறிக்கைகள்

  purevi-imd-forecast1
  purevi-imd-forecast1

  புரெவி புயல் இன்று இரவு பாம்பனுக்கும் கன்யாகுமரிக்கும் இடைப்பட்ட பகுதியில் கரை கடக்கும் என்று வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

  முனைவர் கு.வை.பா. அவர்களி சிறப்பு வானிலை அறிக்கை எண் 4, 03.12.2020, மாலை மணி 1645

  இலங்கை மீது மையம் கொண்டிருந்த ‘புரெவி’ புயல் கடந்த ஆறு மணி நேரமாக மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று 03.12.2020 மாலை 1430 மணிக்கு பாம்பனுக்கு மிக அருகில் நிலைகொண்டுள்ளது. இச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் வீசுகிறது.

  ‘புரெவி’ புயல் அடுத்த மூன்று மணி நேரத்தில் பாம்பனைக் கடந்து, மேற்கு-தென்மேற்காக நகர்ந்து தென் தமிழகத்தை பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே கரையை இன்று இரவு அல்லது நாளை அதிகாலை மறுமுறை கடக்கும்.

  புயலால் ஏற்படக்கூடிய கனமழை, கடுங்காற்று, கடல் கொந்தளிப்பு ஆகியவை நாளை வரை இராமநாதபுரம், தூத்துகுடி மாவட்டங்களிலும் அதன் பின்னர் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இருக்கும் பெருமழை பாதிப்பு அடுத்துள்ள கேரள மாவட்டங்கள் திருவனந்தபுரம், கொல்லம், பந்தனந்திட்டா, இடுக்கி, ஆலபுழை ஆகிய மாவட்டங்களில் இருக்கும்.

  புயல் செல்லக்கூடிய பாதை இன்று 03.12.2020 அன்று 1430 மணிக்கு கணிக்கப்பட்டது

  purevi-imd-forecast
  purevi-imd-forecast

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,115FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »