spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?போட்டியிடுவது குக்கர் சின்னத்தில்..! போஸ்டரில் திமுக தலைவரும் வசனமும்..!

போட்டியிடுவது குக்கர் சின்னத்தில்..! போஸ்டரில் திமுக தலைவரும் வசனமும்..!

- Advertisement -
dinakaran cooker

அமமுக., வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டப்பட்டுள்ள போஸ்டரில் தமிழக முதல்வர் ஆசியுடன் போட்டி என அச்சிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. ஆனால், சில மாவட்டங்களில் இருந்து புதிய மாவட்டங்கள் உதயமானதால், அந்த பிரிக்கப்பட்ட மாவட்டங்களிலும், புதிய மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை. தற்போது இந்த மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. கடந்த 22-ம் தேதியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. வேட்பு மனுக்களை திரும்ப பெற கடந்த ஞாயிற்றுக்கிழமை கடைசிநாள். இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைவரும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 13வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அமமுக., சார்பாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சந்திரசேகர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

stalin-history
stalin-history

அவருக்கு ஆதரவாக ஓட்டப்பட்டுள்ள போஸ்டரில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆசியுடன் போட்டி என அச்சிடப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் புகைப்படத்துடன் அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக போஸ்டரில் சந்திரசேகர் வாராரு வெளிச்சம் தரப் போறாரு… ஆதரப்பீர் வாக்களிப்பீர் வெற்றி சின்னம் பிரஷர் குக்கர் என்று ஒட்டப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe