கேரளா பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் நெல்லை ரயில் நிலையத்தில் தடம்புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம், பாலாக்காட்டில் இருந்து நேற்றிரவு புறப்பட்ட பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லைக்கு இன்று அதிகாலை 4.20 மணிக்கு வந்தடைந்தது. பயணிகளை இறக்கிவிட்ட பின் பெட்டிகளை சுத்தம் செய்வதற்காக ரயில், பராமரிப்பு நிலையத்திற்கு சென்றுகொண்டிருந்தது.
அப்போது எஸ் 3 பெட்டி திடீரென தடம்புரண்டது. இன்ஜின் டிரைவர் தகவல் தெரிவித்ததையடுத்து அதிகாரிகளும், ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.தொடர்ந்து, அவர்கள் தடம்புரண்ட பெட்டியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே ரயில் தடம்புரண்டது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.