
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் கிரையோஜெனிக் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள இஸ்ரோ மையத்தில், எல்விஎம்3 ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடந்தது. நேற்று மாலை 4 மணிக்கு ‘சிஇ-20’ கிரையோஜெனிக் என்ஜின் சோதனை 28 வினாடிகள் நிகழ்ந்தது.
இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்துள்ளனர். இந்த கிரையோஜெனிக் என்ஜின் உதவியுடன் எல்விஎம்3 ராக்கெட் மூலமாக லண்டனில் தயாரிக்கப்பட்ட 36 OneWeb India-1 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது.