தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டார வளமையத்தின் சார்பில், கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப்பள்ளியில் வைத்து, புதியபாரத எழுத்தறிவுதிட்ட விழிப்புணா்வு பேரணி நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்டஅலுவலர் சீவலமுத்து, தலைமைதாங்கி, பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
செங்கோட்டை வட்டார கல்வி அலுவலர் ஜான்பிரிட்டோ முன்னிலை வகித்தார். பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, விழி்ப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திவாறு கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர். பேரணி கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்திலிருந்து துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.
பேரணியின் போது பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்புலெட்சுமி, ஆசிரியர் பயிற்றுநா் சரோஜினி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கனகலட்சுமி, தயாளன், இல்லம்தேடிகல்வி மாவட்ட ஆசிரியா் ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் உள்பட பலர் கலந்து கொண்டனா்.
பேரணிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமைஆசிரியர் பீட்டர்ஜூடுதத்யேஸ் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனா். முடிவில் வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளா் ஐயப்பன் நன்றி கூறினார்.