கடந்த 24மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் மழை பெய்து வந்த நிலையில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி ஊத்தில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
திருநெல்வேலி நாலுமுக்கு பகுதியில் 13 செ.மீ, காக்கச்சி 12 செ.மீ, திருநெல்வேலி மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் உள்ள மாஞ்சோலை, வேளாங்கண்ணி, நீடாமங்கலத்தில் தலா 10 செ.மீ, நன்னிலம், நாகை, திருவாரூரில் தலா 9 செ.மீ, திருப்பூண்டி, திருக்குவளையில் 8 செ.மீ, மன்னார்குடியில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், குமரி, நெல்லை ஆகிய 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.