திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் ஐந்து சன்னதிகளில் பெருமாள் அருள்பாலித்து கொண்டிருக்கிறார். ஊருக்குள் அமைந்துள்ள பெரிய கோயிலில் நின்ற கோலத்தில் சுவாமி அழகிய நம்பிராயர், பிரகாரத்தில் தனிச்சன்னதிகளில் அமர்ந்த கோலத்தில் வீற்றிருந்த நம்பி, சயனக் கோலத்தில் பள்ளிகொண்ட நம்பி, கோயிலுக்கு வெளியே நம்பியாற்றின் கரையில் திருப்பாற்கடல் நம்பி, மேற்குதொடர்ச்சி மலை மீது திருமலைநம்பி ஆகிய ஐந்து சன்னதிகளில் எம்பெருமான் சேவை சாதிக்கிறார்.
பெரிய கோயில் தெப்பக்குளத்தில் ஆண்டுதோறும் தை பூசத்தன்றும், அதற்கு மறுநாளும் இரு நாட்கள் தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில் இன்று இரவு 7 மணிக்கு சுவாமி அழகிய நம்பிராயரும், 2-ம் நாளான நாளை இரவு 7 மணிக்கு சுவாமி திருமலை நம்பியும் தெப்ப உற்சவம் கண்டருள்கின்றனர்.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.