பாலியல் தொல்லை- பாதிரியார் பெனடிக்ட் அன்டோ இன்று கைது..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக குமரி ஆபாச பாதிரியார் பெனடிக்ட் அன்டோ இன்று கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, விளவங்கோடு பாத்திமா நகர் குடல்வால்விளையை சேர்ந்தவர் பாதிரியர் பெனடிக் அன்டோ (29). அவர் தான் பணியாற்றும் தேவாலயத்துக்கு வந்த இளம்பெண்களுடன் பழகி அவர்களுடன் வாட்ஸ் அப் சாட்டிங் செய்து பின்னர் தனது வலையில் வீழ்த்தி ஆபாச வீடியோக்கள் எடுத்து, அதை காட்டியே மிரட்டி பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது.

1190876 ad 1 - 2026

அது மட்டுமின்றி பாதிரியாரின் ஆபாச படங்கள், வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் இளம்பெண்களுடன் நிர்வாண நிலையில் இருந்தவாறு செல்போன் வீடியோ காலில் உரையாடல், முத்தமழை பொழிவது என பல்வேறு காட்சிகள் உள்ளன.

ஆபாசமாக வாட்ஸ் அப் சாட்டிங் செய்த பதிவுகளும் வெளியாகி உள்ளன. இந்நிலையில், பாதிரியாரின் லீலைகள் குறித்து அறிந்ததும், தட்டி கேட்டதால் மகன் மீது பொய் புகார் அளித்து சிறையில் அடைத்துள்ளனர்.

எனவே மகனை விடுவிப்பதுடன், பாதிரியார் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்டம் காட்டாத்துறை பிலாவிளை ஆலந்தட்டுவிளையை சேர்ந்த மினி அஜிதா என்பவர், எஸ்பியிடம் புகார் மனு அளித்தார்.இதே போல் பாதிரியார் பெனடிக் அன்டோ மீது கடந்த 11ம்தேதி, பெங்களூருவில் நர்சிங் படிக்கும் குமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவரும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

இதையடுத்து அவர் மீது போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடத் தொடங்கினர். இது தெரிந்து பாதிரியார் பெனடிக் அன்டோ திடீரென தலைமறைவானார். இந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கிய நாகர்கோவில் பாதிரியார் பெனடிக்ட் அன்டோ தனிப்படை போலீசால் கைது செய்யப்பட்டார். வெளியூர் தப்பி செல்ல முயன்ற பாதிரியாரை நாகர்கோவில் பால்பண்ணை பகுதியில் வைத்து போலீஸ் கைது செய்தது.

Related articles

Recent articles

spot_img