திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் நான்காம் நாளான வியாழக்கிழமை இரவு ஸ்வாமி வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளினார். அம்மன் வெள்ளி சரப வாகனத்தில் எழுந்தருள, வீதி உலா நடைபெற்றது..
ஆவணித் திருவிழா ஐந்தாம் நாளான வெள்ளிக்கிழமை இரவு மேலக்கோயிலில் நடைபெற்ற குடவருவாயில் தீபாராதனை நிகழ்ச்சியில் பக்தர்கள் பெருமளவில் திரண்டு, முருகப் பெருமானை தரிசித்தார்கள்.
ஆவணித் திருவிழா ஆறாம் நாளான சனிக்கிழமை இரவு, ஸ்வாமி வெள்ளித் தேரில் எழுந்தருளினார். அம்மன் இந்திர விமான வாகனத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் பெரும் அளவில் திரண்டனர். ஸ்வாமி வீதி உலா சிறப்பாக நடைபெற்றது..
ஆவணித் திருவிழா ஏழாம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை காலை திருக்கோயில் சண்முக விலாச மண்டபத்தில் இருந்து வெட்டி வேர் சப்பரத்தில் சண்முகப் பெருமான் எழுந்தருளினார். பக்தர்கள் திரண்டு வந்து முருகப் பெருமான் தரிசனம் பெற்று மகிழ்ந்தார்கள்.
ஆவணித் திருவிழா ஏழாம் நாள் சிவப்பு சாத்தி வீதி உலா நடைபெற்றது. முருகப் பெருமான் சிவப்பு வண்ணப் பின்னணியில் ஜொலித்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
ஆவணித் திருவிழாவின் இந்த நிகழ்வின் வீடியோ தொகுப்பு…