
நாகர்கோவில் – ஐதராபாத் – கச்சகுடா இடையே தற்போது இயங்கும் இரண்டு ரயில்களில் ஒன்றை திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் பாதையில் மாற்றி இயக்கவும் திருவனந்தபுரம் வடக்கு-செங்கோட்டை-மதுரை-தாம்பரம் ,கொல்லம் -செங்கோட்டை -ராஜபாளையம் செக்கந்ராபாத் சிறப்பு ரயில்களை வாரம் இருமுறை நிரந்தரமாக இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் – ஐதராபாத் கச்சகுடா இடையே தற்போது இயங்கும் இரண்டு ரயில்களில் ஒன்றை திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் பாதையில் மாற்றி இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவர் முரளி, செயலர் கிருஷ்ணன், பொருளாளர் DRUCC உறுப்பினர் சுந்தரம், ஊடக மற்றும் மக்கள் தொடர்பாளர் ராமன் ஆகியோர் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே அமைச்சரகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று ஜன.19ல் மின்னஞ்சலில் அனுப்பிய வேண்டுகோள்.
தற்போது நாகர்கோவில் ஐதராபாத் கச்சகுடா இடையே இரண்டு வாராந்திர ரயில்கள் இயக்கப்படுகின்றன. சனிக்கிழமைகளில் வண்டி எண் 16354ம் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வண்டி எண் 07436ம் நாகர்கோவில் சந்திப்பு கச்சகுடா இடையே ஓடுகின்றன.
தற்போது திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் வழியாக ஐதராபாத் கச்சகுடாவுக்கு எந்த ஒரு ரயிலும் இல்லை.
இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
மேலும் அம்பை கல்லிடைக்குறிச்சி கீழக்கடையம் பாவூர் சத்திரம் தென்காசி செங்கோட்டை கடையநல்லூர் ராஜபாளையம் சிவகாசி ஊர்களை சேர்ந்த ஏராளமான தமிழக பொறியாளர்கள் ஐதராபாத் சாப்ட்வேர் கம்பெனிகளில் பணி புரிகின்றனர்.
எனவே தெற்கு ரயில்வே தலைமையக அதிகாரிகளும் மதுரை கோட்ட அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுத்து ஒரு நாகர்கோவில் ஐதராபாத் கச்சகுடா ரயிலை திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் பாதையில் திருப்பி விட வேண்டும் என வேண்டியுள்ளனர்.
திருவனந்தபுரம் வடக்கு-செங்கோட்டை-மதுரை-தாம்பரம் ,கொல்லம் -செங்கோட்டை -ராஜபாளையம் செக்கந்ராபாத் சிறப்பு ரயில்கள் பயணிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்த இரு ரயில்களை வாரம் இருமுறை நிரந்தரமாக இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.