அரசாணை கிடைக்காததால் கும்பாபிஷேகம் ரத்து! பொருமித் தள்ளும் பக்தர்கள்!

நாளிதழில் இன்று வெளியாகியுள்ள விளம்பரம் … இந்துக்களே சிந்திப்பீர். !

இந்த பத்திரிகை விளம்பரம் பார்த்து நெஞ்சம் குமுறுகிறது

பக்தர்கள் தங்கள் சொந்த செலவில் பல லட்சம் செலவில் கோவிலை புதுப்பித்து திருப்பணிகள் செய்து நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து திதி பார்த்து நேரம் பார்த்து கும்பாபிஷேகம் நடைபெற நாள் நேரம் குறிக்கப்பட்ட பின்பும்

தமிழக அரசின் கட்டுபாட்டில் உள்ள இந்து சமய அற (மில்லா) நிலைய துறை அரசாணை கிடைக்காததால் கும்பாபிஷேகம் தள்ளி வைப்பு

பணிகள் எல்லாம் துவங்கும்போதே அரசுக்கு அற (மில்லா )நிலைய துறைக்கு தெரியாமல் இருக்குமா ?

கும்பாபிஷேக தேதி ரகசியமாக நேற்று நள்ளிரவிலா குறிக்கப்பட்டது ? இல்லையே முன்பே தகவல் தெரிவித்தும் அற (மில்லா) நிலைய துறை அதிகாரிகளின் பொறுப்பின்மையால் இந்த அபச குணம் ?

அரசாணை கிடைக்காததால் மற்ற வழிபாட்டு தளங்களில் வழிபாடு தடை பட்டது என கேள்வியாவது பட்டு இருக்கிறோமா ?

பிற மத வழிபாட்டு தலங்களில் அரசு தலையிட முடியுமா ?

ஆலயம் காக்க வக்கற்ற அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு
– என்ற இந்துமுன்னணி கோஷத்தின் அர்த்தம் இப்போதாவது புரிகிறதா ?

இந்துவே இனியும் நாம் உறங்கினால் கோவில் சிலைகள் மட்டுமல்ல செங்கல்கள் கூட களவாடப்பட்டு சூறையாடப்படும்!

– கா.குற்றாலநாதன்