திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவில் நாளை தேரோட்டம் நடைபெற உள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமியும், தேவியும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வருகின்றனர்.
ஆவணித் திருவிழாவின் 8ஆம் நாளான நேற்று காலை 6 மணிக்கு சுவாமி சண்முகப் பெருமான் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சார்த்தி எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து மேலக்கோயில் சேர்ந்தார். அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்து பகல் 11 மணிக்கு சுவாமி சண்முகப் பெருமான் பச்சை சார்த்தி சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து இரவில் திருக்கோயில் சேர்ந்தார்.
ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நாளை தேரோட்டம் நடக்கிறது.