நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நேற்று விநாயகர் சதுர்த்தி அழைப்பு தொடர் பாக நடைபெற்ற ஊர்வலத்தில் ஒரு தரப்பினர் தங்கள் தெரு வழியாக ஊர்வலம் வரக் கூடாது என்று கூறி, தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கல்வீசித் தாக்குதலும் நடத்தப் பட்டது.

இந்நிலையில், செங்கோட்டை விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியின் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொண்டு, தீர்மானங்களை முன்மொழிந்தனர்.

செங்கோட்டையில் அனைத்து இந்து சமுதாய, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப் பட்ட தீர்மானங்கள்:

காவல் துறை வழிகாட்டுதலில் 25 வருடம் எந்தப் பாதையில் வீர விநாயகர் சென்றாரோ அதே பாதையில் திட்டமிட்டபடி ஊர்வலம் செல்லும்.

திட்டமிட்டு கலவரம் செய்து, வீர விநாயகரை உடைத்த இஸ்லாமியர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செங்கோட்டை எஸ்.ஐ. சஸ்பென்ட் செய்யப் பட வேண்டும். இந்தக் கலவரத்துக்கு காரணமான செங்கோட்டை காவல்துறை உதவி ஆய்வாளர் தமிழ்ச் செல்வன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்.

* இந்துக்கள் இனி எந்தக் காரணத்தைக் கொண்டும் இஸ்லாமியர்களின் கடைகளில் பொருட்கள் வாங்கக்கூடாது.

தென்காசி DSP புளியங்குடிDSP ஊர்வலத்திற்கு வரக்கூடாது. இந்தக் கலவரத்தின் பின்னணியில் உறுதுணையாக இருக்கும் தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. மணிகண்டன் ஊர்வலத்தின் பாதுகாப்புப் பணிக்கு வரக் கூடாது.

விநாயகர் சிலை பழைய வழித்தடத்திலேயே செல்ல வேண்டும். போலீஸார் வழி மறித்தாலும் சிலையை போலீஸாரே எடுத்துச் சென்றாலும் அதையும் மீறி, சிறை செல்லவும் தயாராக உள்ளோம்.

இவ்வாறு அனைத்து இந்து சமுதாய தலைவர்கள், அனைத்து கட்சித் தலைவர்கள், இந்து இளைஞர்கள் சங்கம் சார்பாக முடிவு எடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

ஊரில் உள்ள அனைத்து சமுதாயத் தலைவர்களும் ஒரே கருத்தை பதிவு செய்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.

 

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.