கல் எறிந்து கலவர பதற்றம் தணியாமல் பார்த்துக் கொள்ளும் மத அடிப்படைவாதிகள்!

காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டால், பெரும் கலவரம் வெடிக்கும் அபாயம் நிலவுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஏற்படுத்தப் பட்ட திட்டமிட்ட வன்முறை இப்போது மேலும் விரிவடைந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் முடிந்த பின்னரும், தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிலர் முயன்று வருகின்றனர்.

புதன்கிழமை இரவு தொடங்கிய விநாயகர் அழைப்பு ஊர்வலத்தில் விநாயகர் மீது கல்லெறிந்து கலவரத்துக்கு வித்திட்டார்கள் இஸ்லாமியர்கள் சிலர். அதன் பின்னர் இரு தரப்பு மோதல் ஏற்பட்டு, பதிலுக்கு விநாயகர் ஊர்வலத்தில் வந்தவர்கள், சிறுவர்கள் முதல் பலரும் திருப்பி கற்களை எறிந்து அந்த இடத்தையே ரண களமாக்கினர். இந்நிலையில் போலீஸார் அதிகம் குவிக்கப் பட்டு, விநாயகர் சதுர்த்தி சிலைகள் கரைப்பு ஊர்வலம் தொடங்கியது. அப்போதும் மீண்டும் கல்லெறிந்து ஊர்வலத்துக்கு தடை ஏற்படுத்த முயன்றார்கள்.

ஊர்வலம் முடிந்து வந்த பின்னர் மேலூர் பகுதியில் ஒரு சிறு அம்மன் கோயிலை இடித்து வீடுகளுக்குள் பெட்ரோல் குண்டு வீசி கலவரத்தை தணியாமல் பார்த்துக் கொண்டனர். இதே நேரம், செங்கோட்டை பார்டர் பகுதியில் விநாயகர் சிலைகள் கரைப்பு நடைபெற்ற சற்று நேரத்தில் அங்கும் ஓரிரு கடைகள் மீது கல்வீசித் தாக்கினர்.

இந்நிலையில், இன்று மாலை செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தைகாக இந்து அமைப்பைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் தலைமையில் பலரும் திரண்டு முற்றுகைப் போராட்டம் நடத்தினர். விநாயகர் சிலை சேதம் தொடர்பாக புகார் கூடி, தீர்வு காண வேண்டினர்.

இந்நிலையில், TN 76 AH 7851 என்ற எண்ணுள்ள பஜாஜ் 125 டூவீலரில் வந்த இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவன், செங்கோட்டை கீழுரில் உள்ள அக்ரஹாரப் பகுதியில், கிருஷ்ணன் கோவில் தெருவில் கிழக்கிலிருந்து மேற்கு வரை வந்து, ஆட்கள் அதிகம் இல்லாததை கவனித்து மீண்டும் திரும்பி வந்து, கிழக்கே சென்று ஒரு பெரிய கல்லை வண்டியில் எடுத்து வந்து அங்கே புத்தம்புதிதாய் நிறுத்தப் பட்டிருந்த கார் ஒன்றின் மீது கல்லை எறிந்து கண்ணாடியை உடைத்து விட்டு வண்டியில் திரும்பியுள்ளான். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஓரிரு வயதான பெண்மணிகளும், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களும் வண்டி எண்ணைக் குறித்துக் கொண்டனர். உடனே காவல் துறையில் புகார் செய்யப் பட்டு, வண்டியில் வந்த நபரின் அங்க அடையாளங்களை அவர்கள் போலீஸாரிடம் கூறினர்.

செங்கோட்டையில் கவனத்தை திசை திருப்ப அங்கங்கே கல் எறிந்து கலவரத்தை மீண்டும் ஏற்படுத்தி வருகிறார்கள் இஸ்லாமி அடிப்படைவாதிகள் சிலர் என்று குற்றம் சுமத்துகிறார்கள் ஊர் மக்கள். காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டால், பெரும் கலவரம் வெடிக்கும் அபாயம் நிலவுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.