செங்கோட்டை கலவரத்தில் கைதான இந்துக்களை விடுவிக்கக் கோரி தமிழிசை தலைமையில் ஆர்ப்பாட்டம்!

இந்நிலையில், தென்காசி, செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாஜக.,வினர் தென்காசிக்கு சற்று தொலைவில் உள்ள ஆலங்குளம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்தனர்.

tamilisai protest
நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக, 19 பேரை போலீஸ் கைது செய்துள்ளதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிக்க கோரி, ஆலங்குளத்தில் பாஜக் மாநில தலைவர் தமிழிசை தலைமையில் பாஜக-வினர் போலீசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலங்குளம்: நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, கல்லெறியப் பட்டு அதனால் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்துக்கள் அனைவரையும் உடனே விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்  தலைமையில் பாஜக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் கல்லெறிதலில் ஈடுபட்டதாக இந்து இளைஞர்கள் சிலர் மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டு, கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். மேலும், இளைஞர்களை போலீஸார் கல்லூரிகளுக்குச் சென்று தேடியதாகவும், அதனால் பெற்றோர் பெரிதும் அச்சத்தில் ஆழ்ந்ததாகவும் இந்துக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதை அடுத்து,  இந்துக்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுவதைக் கண்டித்தும், கைது செய்யப் பட்ட இந்துக்களை உடனே விடுவிக்க வலையுறுத்தியும் செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.

ஆனால் செங்கோட்டை, தென்காசி பகுதியில் 144 தடை உத்தரவு வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளதால், தமிழிசை ஆர்ப்பாட்டம் செய்வது குறித்து பரபரப்பு ஏற்பட்டது. தடையை மீறி தமிழிசை ஆர்ப்பாட்டம் செய்வாரா என்று கேள்விகள் எழுந்தன. தமிழிசை செங்கோட்டைக்கு வரும் வழியில், நெல்லையிலேயே அவரைக் கைது செய்யவும் போலீஸார் தயாராக இருந்தனர்.

இந்நிலையில், தென்காசி, செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாஜக.,வினர் தென்காசிக்கு சற்று தொலைவில் உள்ள ஆலங்குளம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்தனர்.

அதன்படி, இன்று மதியம் தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த தமிழிசை சௌந்தர்ராஜன், பின்னர் ஆலங்குளம் வந்தார். அங்கே பாஜக., தொண்டர்கள் நயினார் நாகேந்திரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். இதை அடுத்து தமிழிசையை வரவேற்ற பாஜக., தொண்டர்கள் அங்கே ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்..

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.