செங்கோட்டையில் 144 முடிந்தது; இஸ்லாமியர் தலைமையில் அனைத்து சமுதாய அமைதிப் பேரணி நடந்தது!

எனவே, தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத வரையில் இது போன்ற அமைதிக் கூட்டங்களில் பேரணிகளில் பங்கேற்க மாட்டோம் என்று இந்து வர்த்தகர்களும் மக்களும் கூறியுள்ளனர்.

sengottai peace walk4

செங்கோட்டை: நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தில் இஸ்லாமியர்கள் கல்லெறிந்ததால் ஏற்பட்ட கலவரம் காரணமாக, 144 தடை உத்தரவு அமல்படுத்தப் பட்டது. தொடர்ந்து இன்று வரை நீட்டிக்கப் பட்ட தடை உத்தரவு இன்று காலை தளர்த்தப் பட்டது.

இதை அடுத்து செங்கோட்டையில் இன்று மாலை அனைத்து சமுதாய மக்கள் சார்பில் சமூக நல்லிணக்க அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் இஸ்லாமியர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். செங்கோட்டை வர்த்தக சங்க தலைவரும் நகர திமுக., செயலாளரும், சலீம் பேக்கரி உரிமையாளருமான ரஹீம் தலைமையில், இஸ்லாமியர்கள் பெருந் திரளாகக் கலந்து கொள்ள, திமுக., காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இந்துக்கள் சிலர் பேரணியில் கலந்து கொண்டனர்.

செங்கோட்டை தாலுகா அலுவலகம் துவங்கி, மேலூர் ரோடு வழியாக மீண்டும் தாலுகா அலுவலகத்தில் முடிந்த இந்தப் பேரணிக்கு காவல்துறையினர், வட்டாட்சியர், கோட்டாட்சியர் என அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

sengottai peace walk9

ஏற்கெனவே விநாயகர் மீது இஸ்லாமியர்கள் கல்லெறிந்து கலவரத்தை ஏற்படுத்தி, அதற்கு பதிலுக்கு பதிலாக கல்லெறிந்ததால், இந்து இளைஞர்கள் பேரில் குண்டர் சட்டமும் வழக்கும் பாய்ந்து சிலர் கைதாகி சிறையில் உள்ளனர். இப்படி, அப்பாவி இந்து இளைஞர்கள் கைதாகக் காரணமான சம்பவத்தில் தொடர்புடைய இஸ்லாமிய வன்முறையாளர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பதால், இந்து வர்த்தகர்களும் பொதுமக்களும் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மீது கடும் மன வருத்தத்திலும் கோபத்திலும் உள்ளனர்.

இந்து இளைஞர்களைக் கைது செய்து குண்டர் சட்டத்தில் போட்ட காவல் துறை, ஒப்புக்கு இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காட்டி, வெளியூர்களைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் 3 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், சம்பவத்தில் ஈடுபட்ட உள்ளூர் இளைஞர்கள் குறித்து காவல்துறை பேச்சு மூச்சு விடவில்லை.
sengottai peace walk6எனவே, தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத வரையில் இது போன்ற அமைதிக் கூட்டங்களில் பேரணிகளில் பங்கேற்க மாட்டோம் என்று இந்து வர்த்தகர்களும் பொதுமக்களும் கூறியுள்ளனர். மேலும், முஸ்லிம்களின் கடைகளில் பொருள்களை வாங்க மாட்டோம் என்ற தீர்மானத்தில் உறுதியாக உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.