திருநங்கை திருமணத்தை கோயிலில் நடத்த நிர்வாகம் மறுப்பு! ஏமாற்றத்துடன் சென்ற ஜோடி!

ஆனால், திருநங்கையான ஸ்ரீஜா திருமணத்தை கோயிலில் வைத்து நடத்துவதற்கு, கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் கோயிலில் திருமணத்தை நடத்தக் கூடாது என்றும் கூறிவிட்டது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

transgenter1

தூத்துக்குடி: தூத்துக்குடி சிவன் கோவிலில் திருநங்கையின் திருமணத்தை நடத்துவதற்கு கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இதனால் திருமணம் செய்ய இயலாமல் ஜோடி ஏமாற்றத்துடன் வெளியேறியது.

புதன் கிழமை இன்று காலை மணி 10.45 முதல் 11.45 வரை தூத்துக்குடி அருள்மிகு சங்கரராமேஸ்வரர் திருக்கோயிலில் திருமணம் நடைபெறுவதாக தீர்மானிக்கப் பட்டிருந்தது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஜி.பாலசுப்ரமணியன், பி சுப்புலெட்சுமி தம்பதியின் மகன் அருண் குமாருடன், தூத்துக்குடி பேச்சிராமன், வள்ளி தம்பதியின் மகள் ஸ்ரீஜாவுக்கு திருமணம் நடத்தப் படும் என்று அழைப்பிதழ் அச்சடித்து அனைவரையும் அழைத்திருந்தனர்.

தொடர்ந்து முந்தைய நாளே அழைப்பிதழையும் கொடுத்து, கோயிலில் திருமணத்தை நடத்துவதற்கு அனுமதி கேட்டு, ரூ.600 பணம், கொடுத்துள்ளனர். ஆனால், நிர்வாக அதிகாரி இல்லாததால், பணத்தை மட்டும் பெற்றுக் கொண்ட கோயில் ஊழியர்கள், நாளை வரும் போது கேட்டு வைக்கிறோம் என்று சொல்லி அனுப்பி வைத்துள்ளனர்.

அதனை நம்பி, இன்று காலை கோயிலுக்கு வந்தவர்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.  திருநங்கையான ஸ்ரீஜா திருமணத்தை கோயிலில் வைத்து நடத்துவதற்கு, சட்டத்தில் இடமில்லை என்று கூறி, கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் கோயிலில் திருமணத்தை நடத்தக் கூடாது என்றும் கூறிவிட்டது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

பின்னர் கோயில் வெளியே, தங்களுக்குள் தாலியை எடுத்து கழுத்தில் கட்டி, நட்புகளுடன் திருமணத்தை முடித்துக் கொண்டு, காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தனர். தொடர்ந்து, திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி, பதிவுத்துறை அலுவலகத்துக்கு படை எடுத்தனர். இவர்களின் வாக்குவாதங்களால்  கோயில் மற்றும் காவல் நிலையங்களில் இன்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

transgenter marriage

Advertisements

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.