நெல்லை ஏபிவிபி மாணவர் அமைப்பு சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவிப்பு!

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு, சட்டமேதை தேசிய தலைவர் அம்பேத்கரின் நினைவு தினத்தை நாடு முழுவதும் சமுதாய சமத்துவ தினமாக கொண்டாடி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டம் நெல்லை ரயில் நிலையம் அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு திருநெல்வேலி மாநகர ஏபிவிபி கிளையின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் விஷ்ணு, மாநகர செய்தி தொடர்பாளர் சஞ்சீவ். மதிதா இந்துக் கல்லூரி செயலாளர் விகாஷ் கருப்பசாமி மற்றும் மாணவர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்