23/09/2019 7:07 PM

பம்பை வரை தமிழக அரசுப் பேருந்துகள்… நீதிமன்றம் அனுமதி!

பம்பை வரை தமிழக அரசுப் பேருந்துகள் செல்ல கேரள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சபரிமலைக்குச் செல்ல புனலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பம்பை வரை பேருந்துகள் அனைத்தும் சென்றன. பல்லாண்டுகளாக, பம்பை வழியே சபரிமலைக்கு மலைப் பாதையில் சிறிய பாதை எனப்படும் குறுகிய தொலைவு பாதை உருவாக்கப் பட்ட பின்னர் பம்பை பகுதி பிரபலம் அடைந்தது.

இதனால் தமிழகத்தின் செங்கோட்டை, குமுளி ஆகிய ஊர்களின் வழியாக பம்பைக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப் பட்டன. இது பிரதான மலைப் பாதை ஆனது. சென்னையில் இருந்தும், செங்கோட்டை பணிமனைகளில் இருந்தும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், த.நா. அரசு போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த பேருந்துகள் பத்தனம்திட்ட, பம்பை வரை இயக்கப் பட்டன.

இந்நிலையில் திடீரென மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்ற காரணம் கூறி, பம்பைக்கு பதிலாக அதில் இருந்து 16 கி.மீ. ,தொலைவுக்கு முன் உள்ள நிலக்கல்லில் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப் பட்டு, அங்கிருந்து கேரள அரசு பஸ்களில் மட்டுமே பம்பைக்கு செல்லும் நிலை உருவானது.

இதனிடையே, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அண்மையில் சபரிமலை யாத்திரை சென்ற போது, நிலக்கல்லில் நிறுத்தப் பட்டார். விஐபி வாகனம் மட்டுமே பம்பைக்கு அனுமதிக்கப் படும் என்றும், உடன் வந்தவர்களை அனுமதிக்க முடியாது என்றும் போலீஸார் கூறியதால், மத்திய அமைச்சர் கேரள அரசு பேருந்திலேயே பயணம் செய்தார்.

இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது கேரள பஸ்கள் செல்லும்போது, அதே பாதையில் ஏன் தமிழக அரசு பஸ்களும் செல்ல முடியாது?! செல்லக் கூடாது என்று கேள்வி முன்வைக்கப் பட்டது. சுற்றுலா வாகனங்கள் வேண்டுமானால் பம்பையில் நெரிசலை ஏற்படுத்தக் கூடும், ஆனால் கேரள பஸ்களைப் போன்று தமிழக அரசு பஸ்களும் பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு உடனே திரும்பப் போகின்றன எனும் போது, கேரள அரசு ஏன் அதற்கு தடை விதித்தது என்ற கேள்வி எழுப்ப பட்டது.

இந்நிலையில், நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்ட தமிழக அரசு பேருந்துகளை, பம்பை வரை இயக்க கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பம்பை செல்ல கேரள அரசு பேருந்துகள் மற்றும் விஐபி வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது அனுமதி அளிக்கப் பட்டுள்ளதால், இனி தமிழக அரசு பேருந்துகள் பம்பை வரை செல்லலாம்.

Recent Articles

4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு! முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்!

உச்ச நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்ற நிலையில் உச்ச நீதிமன்றம் முழு பலத்தை எட்டியுள்ளது.

3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.!

லாரிகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடந்த 3வது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ் பெறப்பட்டதாக கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

ஆந்திர துணை முதலமைச்சர் நடிகையாகியுள்ளார்!

இந்தப் படத்தின் ஆசிரியர் கதாபாத்திரத்தில் புஷ்பா ஸ்ரீவாணி நடிக்கிறார். இதற்காக விழியநகரம் மாவட்டத்தில் உள்ள கொரடா கிராமத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டார். இவருடன் விழியநகரம் மாவட்ட ஆட்சித்தலைவரான ஹரிஜவஹர்லாலும் படப்பிடிப்பில் பங்கேற்றார்.

பட்டப்பகலில் மாணவரை வெட்டித் தப்பி ஓட்டம்! தூத்துக்குடியில் பயங்கரம்!

அப்போது, நான்கு இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த கும்பல், கல்லூரி அருகிலேயே அபிமன்யூவை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் அடைந்ததால் சுருண்டு விழுந்த அபிமன்யூ, சம்பவ இடத்திலேயே உயிரிழந்‌தார். இதையடுத்து, அந்த கும்பல் தப்பிச் சென்றது.

மோடி, டிரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’! இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்!

இன்று டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் என சமூகத் தளங்களில் வைரலாகியிருக்கிறது அந்த செல்ஃபி. அது குறித்து வீடியோ பதிவும் வைரலாகி வருகிறது.

Related Stories